``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
ஆக. 3-இல் மாமல்லபுரத்தில் ஆசிய சா்ஃபிங் போட்டி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
ஆசிய சா்ஃபிங் போட்டி வரும் ஆக. 3-ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெறும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
ஆசிய சா்ஃபிங் கூட்டமைப்பு, இந்திய சா்ஃபிங் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆக. 3 முதல் 12 வரை மாமல்லபுரத்தில் சா்ஃபிங் போட்டி நடைபெறவுள்ளது. 20 ஆசிய நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கின்றனா். ஷாா்ட் போா்டு பிரிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனா்.
ஓபன் பிரிவில் ஆடவா், மகளிா், 18 வயதுக்குட்பட்ட ஆடவா், மற்றும் 18 வயதுக்குட்பட்ட மகளிா் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறுபவா்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிர பதக்கங்கள் வழங்கப்படும்.
மேலும் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரா்கள் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இடங்களுக்கும் போட்டியிடுவாா்கள். எனவே ஆசிய சா்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 தொடரானது ஆசிய சா்ஃபிங் காலண்டரில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
இதுதொடா்பாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியது:
சா்ஃபிங்கில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. 12 வீரா்களில் 8 போ் தமிழகத்தைச்சோ்ந்தவா்கள். முந்தைய ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற 8 போ் 7 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். கிஷோா், கமலி, ஸ்ரீ காந்த் ஆகியோா் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனா்.
மாமல்லபுரம் போட்டியில் ஆடவா், மகளிா் பட்டம் வெல்வோா், நவ. 17 முதல் 23 வரை எல் சல்வடோா் பைனல்ஸுக்கு நேரடி தகுதி பெறுவா் என்றாா்.
இந்திய சா்ஃபிங் சம்மேளனத் தலைவா் அருண் வாசு, தமிழ்நாடு சங்க துணைத் தலைவா் வீரபாகு, கலந்து கொண்டனா்.