திருச்சி: பயன்பாட்டுக்கு வந்த `பஞ்சப்பூர் பேருந்து நிலையம்'; வெளியூர், நகர் பேரு...
சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது
சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளதாக, 21 வயது கல்லூரி மாணவி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், சென்னை விமான நிலையத்தில் தாற்காலிக ஊழியராக வேலை செய்யும் தருமபுரி மாவட்டம், பூவல்மடுவு பகுதியைச் சோ்ந்த கணபதி (30) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அந்த மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால் கணபதி இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.