செய்திகள் :

விண்வெளியை எட்டிய சுபன்ஷு சுக்லா; அடுத்து என்ன? - Docking வீடியோ !

post image

விண்வெளியை இரண்டாவது இந்தியர் எட்டியிருக்கிறார். இன்னும் ஒரு சில மணிநேரத்தில், கால் பதித்துவிடுவார்.நேற்று மதியம் 12 மணியளவில், இந்தியாவை சேர்ந்த சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தனர்.

இந்த ராக்கெட்டின் விண்கலம் பெயர் டிராகன். ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட டிராகன் தற்போது விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது (Docking).

அடுத்ததாக, அழுத்தம், வெப்பநிலை போன்ற ஒரு சில சரிபார்ப்பிற்கு பிறகு, நான்கு பேர் கொண்ட குழு விண்வெளி நிலையத்திற்குள் நுழையும்.

Axion 4 Mission | Shubhanshu Shukla
Axion 4 Mission | Shubhanshu Shukla

இவர்களின் இந்த விண்வெளி பயண நேரம் சுமார் 28 மணி நேரம் ஆகும். ஒரு மணிநேரத்திற்கு 478 கி.மீ வேகத்திற்கு இந்த விண்கலம் பயணித்தது.

சுபான்ஷு சுக்லாவின் குழு இன்னும் 14 நாள்களுக்கு விண்வெளியில் தங்கி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இவர்களின் விண்வெளி பயணத் திட்டத்தின் பெயர் 'Axiom 4'.

கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளியை தொடுகிறார்.

டிராகன் விண்கலத்தின் டாக்கிங் வீடியோ இதோ...

Shubhanshu Shukla: விண்வெளியில் தடம் பதிக்கப்போகும் 2வது இந்தியர்; விண்ணில் பாய்ந்தது ஃபால்கான் 9!

இந்தியாவைச் சேர்ந்த இரண்டாவது நபர் விண்வெளியில் கால் பதிக்கப் போகிறார். அவர் தான் சுபன்ஷு சுக்லா. இவரையும், இவருடன் விண்வெளிக்குச் செல்லும் நான்கு பேர் கொண்ட குழுவைத் தாங்கிய ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின்... மேலும் பார்க்க