செய்திகள் :

”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் குழந்தைகள் - ஏன்?

post image

"வகுப்பறை இல்லை, சீருடை இல்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை... உலகம் மட்டுமே அவர்களின் பாடம்" என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் நிலையில் இருந்து மாற்றியுள்ளனர் அமெரிக்க தம்பதியினர்.

அமெரிக்கா ஃபுளோரிடாவைச் சேர்ந்த டயானா மற்றும் ஸ்காட் பிளிங்க்ஸ் தம்பதியினர் தங்களது மூன்று மகள்களையும் உலகக் கல்வி கற்பித்து வருகின்றனர்.

இவர்கள் தினமும் வகுப்பறைக்குச் சென்று பாடம் கற்றுக் கொள்வதில்லை மாறாக ஒரு கண்டம் விட்டு கண்டம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வாழ்க்கை பாடம் படிக்கின்றனர்.

தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை, வகுப்பறை இல்லை, சீருடை இல்லை.. ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அந்தந்த நாட்டின் கலாசார மொழிகளை கற்றுக்கொள்கின்றனர்.

லூசில் (12), எடித் (11) மற்றும் ஹேசல் (9) என்ற மூன்று பேர் ஏதென்ஸில் கிரேக்க புராணங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், ஸ்பெயினில் ஃபிளமெங்கோ நடனத்தைப் பயிற்சி செய்கிறார்கள், மாண்டினீக்ரோவில் கடல் பாதுகாப்பை ஆராய்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் சுற்றி வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்கின்றனர்.

இது குறித்து டயானா கூறுகையில், ``எங்களது மகள்கள் புத்தகத்தில் இருந்து மட்டும் இல்லாமல், வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது எங்களது மகள்கள் வீட்டில் இருந்து, கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலிருந்து இந்த எண்ணம் எங்களுக்கு தோன்றியது. தற்காலிகமாக இருந்ததை நிரந்தர வாழ்க்கை முறையாக மாற்ற நாங்கள் நினைத்தோம்.

வீட்டில் இருந்து கற்றுக் கொள்வது எவ்வளவு மகிழ்ச்சிகரமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, வீடுதான் முழு உலகமாக இருந்தால்.. என்று உலகம் முழுவதும் உலக கல்வி பயில தங்களது மகள்களை அழைத்துக்கொண்டு பயணிக்க தொடங்கிவிட்டோம்” என்கின்றனர், இந்த அமெரிக்க தம்பதியினர்.

அப்போதிருந்து, பிளிங்க்ஸ் குடும்பம் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளது. ஐஸ்லாந்து, தாய்லாந்து, போர்ச்சுகல், மொராக்கோ மற்றும் இப்போது உருகுவே போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வருகிறது. அவர்களின் முதல் ஆண்டில் மட்டும், கோஸ்டாரிகா, மெக்சிகோ உட்பட 22 நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்; விரட்டிப் பிடித்த அதிகாரிகள் - 15 ரயில்களின் சேவை பாதிப்பு!

ரயில்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலே ரயில்வே லெவல் கிராசிங்கை மூடிவிடுவது வழக்கம். ஆனால் தெலங்கானாவில் ஒரு பெண் செய்த காரியம், ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள ரங்கா ... மேலும் பார்க்க

கூமாபட்டி: `ஏங்ங்ங்க... ரீல்ஸை நம்பி வந்துராதீங்க!' - எச்சரிக்கும் அதிகாரிகள்.. பின்னணி என்ன?

கடந்த சில தினங்களாக இன்ஸ்டா கிராம், யூடியூப், எக்ஸ் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் " ஏங்ங்ங்க... கூமாபட்டிக்கு வாங்க" என்று அழைக்கும் இளைஞரின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.மன அழுத்தமா கூமாபட்டிக... மேலும் பார்க்க

Rolls Royce: 1 வயது மகளுக்கு ரூ.5 கோடிக்கு கார் பரிசு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒரு வயது மகளுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ஆடம்பர காரை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சதீஷ் சன்பால் தன... மேலும் பார்க்க

"நான் அமன் சொத்து; என்னைத் தொட்டால் வெட்டுவேன்" - முதலிரவில் கத்தியைக் காட்டி கணவனை மிரட்டிய மனைவி

உத்தரப் பிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் தனது கணவனைக் காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு வைத்தார்.சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி தேனிலவுக்... மேலும் பார்க்க

`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ஹைகோர்ட்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜேந்திர காவிட். பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராஜேந்திர காவிட் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு இரண்டு மனைவி இருப்பதை குறி... மேலும் பார்க்க

Lumpsum: உங்க பேங்க் பேலன்ஸ் கூறும் பொய்... லம்ப்சம் முதலீடு பற்றித் தெரியாத அந்த விஷயம்...

நீங்க 10, 15, 25 வருஷம் உழைச்சாச்சு. பார்த்து பார்த்து பேங்குலசில லட்சங்கள் பணமும் சேர்த்தாச்சு. ரொம்ப நிம்மதியா இருக்குல்ல? நாம நினைக்குற நேரத்துல நம்மளைக் காப்பாத்தக்கூடியபணத்தை சேர்த்துட்டதா நினைக்... மேலும் பார்க்க