செய்திகள் :

ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுட்டுக்கொலை!

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. சந்து ராதோட் (வயது 47). இவர், மலக்பேட் பகுதியிலுள்ள பூங்காவின் அருகில் இன்று (ஜூலை 15) காலை, தனது வழக்கமான நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சந்து ராதோடின் மீது மிளகாய் பொடியை வீசி, துப்பாக்கியால் சுட்டு, தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த சந்து ராதோட், சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சந்து ராதோடின் உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டது!

A Communist Party of India official has been shot dead by unidentified assailants in Hyderabad, Telangana.

கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்த சுபான்ஷு சுக்லா: மோடி

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் ஆஜராக லக்னௌ வந்தடைந்தார் ராகுல்!

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி லக்னௌ வந்தடைந்தார்.பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய வீரர்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்பட... மேலும் பார்க்க

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்களும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பினர்.அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவ... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடர்: குடியரசுத் துணைத் தலைவருடன் கார்கே ஆலோசனை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.நா... மேலும் பார்க்க

அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார் ஆந்திர முதல்வர்!

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது இரண்டு நாள் தில்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார்.இரண்டு நாள் பயணமாக தில்லி வந்துள்ளது... மேலும் பார்க்க

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வி: கேஜரிவால்

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார். தலைநகரில் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்... மேலும் பார்க்க