கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!
தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வி: கேஜரிவால்
தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார்.
தலைநகரில் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயின்ட் ஸ்டீஃபென்ஸ் கல்லூரி மற்றும் செயின்ட் தாமஸ் பள்ளிக்கு இன்று (ஜூலை 15) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதேசமயம் திங்களன்று மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் புரளியாக மாறியது.
இதுதொடர்பாக கேஜரிவாலின் எக்ஸ் பதிவில்,
தில்லியில் என்ன நடக்கிறது? நேற்று இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள், இன்று மற்றொரு பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயத்தில் உள்ளதாகவும், பெற்றோர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். தொடர்ந்து இரண்டு நாள்களாகக் கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து தில்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாஜகவின் நான்கு எஞ்சின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டன.
ஆம் ஆத்மி தலைவர் அதிஷி,
தில்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சிதைந்துவிட்டது. மாணவர்கள் பாதுகாப்பு பாஜக அரசுக்கு முக்கியமில்லையா?
தில்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது மிகவும் கவலையாக இருக்கிறது. பாஜகவின் நான்கு எஞ்சின் அரசு பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டன என்று அவர் பதிவிட்டுள்ளார்.