செய்திகள் :

சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? - STR 49 அப்டேட்ஸ்

post image

கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்.டி.ஆர்.-49' படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைந்திருக்கிறார். அப்படி ஒரு அசூர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் ஆனார்.. மீண்டும் 'வெந்து தணிந்தது காடு'வில் பார்த்த சிலம்பரசனை காண முடியும்' என்றெல்லாம் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்து சிலம்பரசனின் வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

வெற்றிமாறன்

அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் வந்தது எப்படி என பார்க்கலாம். அதாவது இந்த படம் தொடங்குவதற்ௐகு முன்னர், தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'வாடி வாசல்' படம் உருவாகவிருந்தது. ஆனால், அந்த படத்தின் முன்தயாரிப்பு வேலைகளுக்காக் கால அவகாசம் தேவைப்பட்டதால், உடனடியாக அதை தொடங்கும் திட்டத்தை கைவிட்டனர்.

ஆகையால் தாணுவிற்கு வெற்றிமாறனும், சூர்யாவும் தனித்தனியாக படம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். இந்நிலையில் தாணுவிடம் சிலம்பரசனின் கால்ஷீட் இருந்தது. அதே சமயம் சிம்புவிற்கும் 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்கும் படம் தொடங்குவதற்கான சூழல் தள்ளிப்போனது. இந்த நிலையில் 'சிலம்பரசனுடன் ஒரு படம் செய்யலாமா? உங்களுக்கு சம்மதமா, தம்பியிடம் கேட்கலமா?" என வெற்றிமாறனிடம் தாணு கேட்டிருக்கிறார்.

இதற்கு உடனே ஓகே சொன்னார் வெற்றிமாறன். அதை போல, இதே கேள்வியை சிலம்பரசனிடமும் முன் வைத்தார் தாணு. 'வெற்றிசார் டைரக்‌ஷனில் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்குது. எப்போ ஷூட்டிங்னு சொல்லுங்க." என சிம்புவும் ரெடியானார். இப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'எஸ்.டி.ஆர்.49".

சிம்பு

இந்த படத்தில் சிலம்பரசன் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். அதில் ஒன்று இளமையான சிம்பு. ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் இவர்களுடன் இயக்குநர் நெல்சன் என பலரும் நடிக்கின்றனர். படத்தின் நாயகிகள், பரிசீலனையில் உள்ளனர். இந்நிலையில் தான் சிலம்பரசன் 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என்ற செய்தி பரவியுள்ளது.

இந்த செய்தியில் உண்மை இல்லை. படத்தில் இளமையான தோற்றத்தில் சிலம்பரசன் வருகிறார். இதற்காக அவரிடம் உடல் எடையையை குறிக்க சொல்லியிருக்கின்றனர். ஆகையால் உடல் எடையை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் சிலம்பரசன். 10 கிலோ வரை குறைத்துவிட வேண்டும் என அவர் டார்க்கெட் வைத்து ஒர்க் அவுட்களை செய்து வருவதாக தகவல். 'எஸ்.டி.ஆர். 49'க்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செட் ஒர்க்குகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் புரொமோ வீடியோ வெளியாகும் என்றும் சொல்கின்றனர்.

"எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்' படத்தில் நடந்ததை மறக்க முடியாது"- கே.எஸ்.ரவிக்குமார்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும் செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

"ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது" - தயாரிப்பாளர்கள் சங்கம்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: 'செளபின் சாஹிர் கதாபாத்திரத்தில் பகத் நடிக்க வேண்டியது, ஆனால்...' - லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்க... மேலும் பார்க்க

'நானும், அனிருத்தும் மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள், அதனால தான்..'- மோனிகா பாடல் குறித்து லோகேஷ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்க... மேலும் பார்க்க

Lokesh: ``அமீர் கானுடனானப் படம் உலகத்தரமான திரைப்படமாக இருக்கும்'' - அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: " `லியோ' படத்திற்கு பிறகு என்னுடைய சம்பளம்..' - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்

'லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்... மேலும் பார்க்க