அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்
கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பெரியசாமி (27). இவா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியிலிருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உப்பிலியபுரம் போலீஸாா் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பெரியசாமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.