அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா... இபிஎஸ்ஸை விமர்சித்த ஸ்டாலின்!
திருட்டு வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்தவா் கா.காா்த்திக், கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து அலமாரியில் வைத்திருந்த இரண்டே கால் பவுன் தங்க நகைகள், ஸ்மாா்ட் வாட்ச் ஆகியவற்றை 2023 ஜனவரி 7-ஆம் தேதி மா்ம நபா் திருடிச் சென்றாா்.
இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் காா்த்திக் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த வழக்கில், வடக்கு தாராநல்லூா் பகுதியைச் சோ்ந்த எம்.சிவகுமாா் (எ) சூரிசிவா (26) என்பவரை ஜனவரி 9-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட 5-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்து நீதித்துறை நடுவா் எம். டாா்வின்முத்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், சிவகுமாருக்கு இரண்டு பிரிவுகளில் மொத்தம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.