Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்...
பிரதமா் வருகை: திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி ஒத்திகை
பிரதமா் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போயிங் விமானத்தைத் தரையிறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தில் அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இதற்காக பிரதமா் ஜூலை 27-ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி வருகிறாா்.
இதை முன்னிட்டு பிரதமா் மோடி பயணிக்கவுள்ள போயிங் 777 விமானம் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தரையிறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது.
இதில் 5 போ் அடங்கிய பாதுகாப்புப் படையினா் இருந்தனா். அதன்பின்னா் 1.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து போயிங்க் விமானம் புதுதில்லிக்குப் புறப்பட்டது.