`நகையை மீட்டு, மறு அடகு' - வங்கி ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி.. சினிமாவை மிஞ்...
துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ,பி,சி,இ,ஆா், பிஎச் பிரிவுகள், என்ஐடி, துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மா நகா், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.