பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமகவின் 37-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.
இவ்விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள பெரியார், கார்ல் மார்க்ஸ், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, தைலாபுரம் தோட்டம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் பாமக கொடியை மருத்துவர் ச.ராமதாஸ் ஏற்றிவைத்து, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். இருப்பினும், கட்சித் தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணி பங்கேற்கவில்லை
அன்புமணியின் கருத்துக்கு முற்றுப்புள்ளி
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணியின் கருத்து தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த மருத்துவர் ச.ராமதாஸ், அது அவரின் (அன்புமணி) தனிபட்ட கருத்து எனக் கூறி கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிக்க:மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!