உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!
உத்தரப் பிரதேசத்தின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்டது சம்பவத்தில் 24 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜம்மன்லால் (22) கொலை செய்யப்பட்ட காரணத்திற்காகக் குற்றவாளி கரண் வால்மீகிக்கு கூடுதல் அமர்வு நீதிபதி தப்ரேஸ் அகமது ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.
இந்தக் கொலை சம்பவம் ஆகஸ்ட் 22, 2022 அன்று இரவு நடந்ததாகக் கூடுதல் மாவட்ட அரசு வழக்குரைஞர் ராஜேஸ்வரி கங்வார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கூடுதல் மாவட்ட அரசு வழக்குரைஞர் கூறுகையில்,
கொல்லப்பட்ட ஜம்மன்லாலின் உடல் கிராமத்திற்கு வெளியே உள்ள குப்பைமேட்டில் கழுத்தில் கயிற்றால் நெருக்கப்பட்ட காயங்களுடனும், உடலில் கீறல் காயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டது. ஜம்மன்லாலின் சகோதரர் மதன்லால் ஆகஸ்ட் 23 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்ததன் அதனடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
ஜம்மன்லால் மொபைல் போனில் பேசிய பிரதீப், சஞ்சீவ் மற்றும் சுனில் ஆகிய மூவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் வால்மீகி ஒரு கிராமத்துப் பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும், ஜம்மன்லால் அந்த பெண்ணுடன் பேசி வந்ததாகவும், வால்மீகிக்கு இது பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
விசாரித்தபோது, வால்மீகி முதலில் முன்னுக்கு முரனாகப் பேசி வந்தான். பின்னர் ஒப்புக்கொண்டான், நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என்றும் போலீஸார் அதைக் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவன் கூறினான். மேலும் விசாரணையில் வால்மீகி ஒரு பெண்ணுடன் பழகியது வந்தது ஜம்மன்லால் எதிர்த்ததாகவும், பெண்ணின் சகோதரரிடம் சொல்வதாகவும் மிரட்டியுள்ளான்.
இதனால் வால்மிகி கோபமடைந்துள்ளான். கொலை நடந்த இரவு, சுனிலின் வீட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், வால்மீகி ஜம்மன்லாலை தரையில் தள்ளிவிட்டு கயிற்றால் கழுத்தை நெரித்து சம்பவ இடத்திலேயே கொன்றதாக ஒப்புக்கொண்டான்.
ஆதாரங்கள் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் நீதிமன்றம் வால்மீகியை குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது என்று அவர் கூறினார்.