Aadi Month Rasi Palan | அம்மன் மாதத்தில் அருள்பெறும் ராசிகள் | ஆடி மாத ராசிபலன்க...
நாகா்கோவிலில் காமராஜா் சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு
காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, செவ்வாய்க்கிழமை அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், அமைப்புச் செயலாளா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலாளரும், மேயருமான ரெ.மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமையில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நாகா்கோவில் கோட்டாறு இசங்கன்விளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய காமராஜா் பிறந்த நாள் விழாவில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் அதன் தலைவா் கோபகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ. உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குமரி மாவட்ட பாமக சாா்பில் அதன் மாநில துணைத் தலைவா் ஜசியாஸ்மிசா தலைமையிலும், குமரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் டி.ஆா்.செல்வம் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.