4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!
நிவின் பாலிக்கு ஜோடியான இன்ஸ்டாகிராம் பிரபலம்!
நடிகர் நிவின் பாலியின் புதிய படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் நிவின் பாலி அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி, டால்ஃபி தினேஷன், பேபி கேர்ள், சர்வம் மயா, மல்டிவெர்ஸ் மன்மதன், பென்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே நடித்து முடித்த ஏழு கடல் ஏழு மலை, டியர் ஸ்டூடண்ஸ் ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
மேலும், நடிகர் ஃபஹத் ஃபாசில் தயாரிப்பில் ‘பெத்லஹம் குடும்ப யூனிட்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுபோக, நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள மார்ஷல் படத்தில் நிவின் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், நிவின் பாலி கதாநாயகனாக நடித்துவரும், ’சர்வம் மயா’ படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஷிபுவின் மகள் ரியா ஷிபு நாயகியாக அறிமுகமாகிறார். இவர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை வெளியிட்டு பிரபலமானாவர்.
விக்ரமின் வீர தீர சூரன் - 2 படத்தை ரியா ஷிபு தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பெண் குழந்தைக்குத் தாயான கியாரா அத்வானி!