செய்திகள் :

ரூ.9 கோடி இழப்பீடு கோரி ரவி மோகன் வழக்கு: படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

post image

சென்னை: குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காத காரணத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவில், கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் 2 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்திருந்தேன். ஆனால், இதுவரை படப்பிடிப்பைத் தொடங்கவில்லை. இதன் காரணமாக தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனது.

பின்னர் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நாள்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நாள்கள் ஒதுக்கிய போதும், படப்பிடிப்பு நடத்தவில்லை. இதனால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.

எனவே அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளருக்கு தகவல் தெரிவித்தேன். முன் பணமாக கொடுத்த ரூ.6 கோடியை திருப்பித் தரும்படி தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' படம் மற்றும் இந்நிறுவனம் தயாரிக்கும் வேறு படங்களை விற்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். மேலும் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கார்த்திகைபாலன், முன்பணத்தை திருப்பி கொடுக்க நடிகர் ரவி மோகன் தயாராக உள்ளார்.

அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் அத்தொகையை கொடுப்பதாகக் கூறினார். ஆனால், 7 நாள்களில் முன்பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்கின்றனர். இதனால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை, என வாதிட்டார்.

அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஒப்பந்தத்தை மீறி நடிகர் ரவி மோகன், 'பராசக்தி' படத்தில் நடித்துள்ளார் எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்குடன், நடிகர் ரவி மோகன் மனுவையும் விசாரணைக்கு பட்டியலிடுமாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி கூட்டணியில் புதிய படம்!

The Madras High Court has ordered the production company to respond to a petition filed by actor Ravi Mohan seeking compensation of Rs. 9 crore for the loss he suffered due to not starting filming on time.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?: அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை (ஜூலை 16) சைதாப்பேட்டை, 140 ஆவது வார்டு, சென... மேலும் பார்க்க

திருவள்ளுவரை அவமதிப்பது மன்னிக்க முடியாத செயல்: ப.சிதம்பரம்

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை குறள் என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், போலி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற நாகாலாந்து வாலிபர் கைது

பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளஅ வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்த நாகாலாந்து வாலிபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவ... மேலும் பார்க்க

மதுரையில் தவெக 2 ஆவது மாநில மாநாடு: பந்தகால் நடும் விழா

மதுரையில் தமிழக வெற்றிக் கழத்தின் 2-ஆவது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ள நிலையில், மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழா புதன்கிழமை காலை (ஜூலை 16) பொதுச்செயலாளர் ஆனந்த் ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21 ஆம் ஆண்டு நினைவு நாள்

நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் உ... மேலும் பார்க்க

சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து: காரணம் என்ன?

சென்னை: போதிய பயணிகள் இல்லாலததால் சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூர், மும்பை செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்... மேலும் பார்க்க