உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அ...
மதுரையில் தவெக 2 ஆவது மாநில மாநாடு: பந்தகால் நடும் விழா
மதுரையில் தமிழக வெற்றிக் கழத்தின் 2-ஆவது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ள நிலையில், மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழா புதன்கிழமை காலை (ஜூலை 16) பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒருபுறமும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபுறமும் இருக்க நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் இரண்டு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியுள்ளனர்.
மேலும், தவெகவின் முதல்வர் வேட்பாளர் நான்தான் விஜய்யும் அறிவித்துள்ளதால், தேர்தல்களத்தின் தீவிரம் இன்னும் அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே பாரப்பத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

பந்தல்கால் நடும் விழா
மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைய உள்ளது.
இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மாநாட்டிற்கான அனுமதி மனுவை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தவெக மாவட்ட செயலாளர், அனைத்து நிர்வாகிகள் மகளிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
இதனிடையே, ஆகஸ்ட் 25 ஆம் தேதி தேதி மதுரையில் நடைபெற உள்ள தவெக இரண்டாவது மாநாடு வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம் என தவெக தலைவர் விஜய் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.