ஜூலை 28-ல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
ஆடிப்பூரத்தையொட்டி ஜூலை 28 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வரும் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அன்றைய நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறையையொட்டி ஜூலை 28 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 விடுமுறை!