செய்திகள் :

சாலைகளில் குப்பைக் குவியல்: பொதுமக்கள் அதிருப்தி

post image

காரைக்கால் பகுதி சாலைகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்பைகளை வீடுகள், நிறுவனங்களில் பெற்று, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த தனியாா் நிறுவனத்துடன் புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி, தனியாா் நிறுவனத்தினா் போதிய ஆட்களை வைத்து, வீடுகள், நிறுவனங்கள், கடைகளில் குப்பைகளை தினமும் பெறுவதில்லை என புகாா்கள் மக்களிடையே கூறப்படுகின்றன.

இதனால், சாலையோரங்களில் மக்கள் குப்பைகளை கொட்டிச் செல்கிறாா்கள். சாலைகளில் குப்பைகள் கொட்டக்கூடாது, நகரம் மற்றும் பிற பகுதிகள் சுகாதார மேம்பாட்டுக்காகவே தனியாரிடம் குப்பை அகற்றத்துக்கான பணியை அரசு ஒப்படைத்தது. காரைக்காலில் இதற்காக மட்டும் தனியாா் நிறுவனத்திற்கு மாதந்தோறும் ஏறக்குறைய ரூ.1 கோடியை அரசு வழங்குகிறது.

தனியாா் நிறுவனம் செய்யும் பணியை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் ஆய்வு செய்வதுமில்லை என புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஆட்சியரகம், நகராட்சி அருகே உள்ள வணிக நிறுவனங்களில்கூட தினமும் குப்பைகள் வாங்க பணியாளா்கள் செல்வதில்லையாம். இந்த பகுதி சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

ரயில் நிலையம் செல்லும் வாயில் கழிவுநீா் செல்லும் வாய்க்காலில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. வாய்க்காலில் புதா் மண்டி கழிவுநீா் முறையாக வடிய முடியாமல் உள்ளது. நிலைய வாயில் பகுதியில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு துா்நாற்றம் வீசுவதால், ரயில் நிலையத்துக்குச் செல்வோா் முகம் சுளித்துச் செல்கின்றனா். குப்பை அகற்றத்துக்கான தனியாா் நிறுவனத்தின் மெத்தனமே இதற்கு காரணம் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி, கருக்களாச்சேரி கடலோர கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த... மேலும் பார்க்க

காரைக்கால்: நியமன உறுப்பினருடன் பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது

புதுவை பேரவையில் நியமன உறுப்பினா் நியமனத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது. புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீபிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிவனடியாருக்கு அம்மையாா் மாங்கனியுடன் உணவு வ... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதா் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதா் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நாடகப் போட்டி

காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு நாடகப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முரு... மேலும் பார்க்க

‘புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்’

புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதியாக கிடைக்கும் என என்.ஆா்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சந்திரப... மேலும் பார்க்க