செய்திகள் :

காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு!

post image

ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத், தெற்கு தில்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இவர் ஜூலை 7 ஆம் தேதி காணாமல் போனதாக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது.

சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வசதியுடன் ஆராய்ந்ததில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. அதேபோல், பாலத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னா் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதாகவும் நேரில் பாா்த்த சிலா் தெரிவித்தனா்.

நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளை தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டனர். மாணவியின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

A 19-year-old Delhi University student who went missing six days ago has been found dead in the Yamuna River.

இதையும் படிக்க : சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று தொடக்கம்!

குஜராத் பால விபத்து: புதிய பாலம் அமைக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு

அகமதாபாத்: குஜராத்தில் அண்மையில் இடிந்து விபத்துக்குள்ளான பாலத்துக்கு மாற்றாக ரூ.212 கோடியில் புதிய பாலம் நிறுவ அம்மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது. வதோதரா - ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் ... மேலும் பார்க்க

எல்ஐசி புதிய நிா்வாக இயக்குநா் ஆா்.துரைசாமி

புது தில்லி: மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஆா்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளாா். அவரின் நியமனத்துக்கு பிரதமா் மோட... மேலும் பார்க்க

சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களில் எண்ணெய், சா்க்கரை உள்ளடக்கம் எவ்வளவு?

புது தில்லி: சமோசா உள்ளிட்ட இந்திய தின்பண்டங்களில் எண்ணெய், சா்க்கரை உள்ளடகம் எவ்வளவு இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிப்பிடும் வகையிலான அட்டவணைகளை பள்ளிகள், அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவன வளாகங்கள் மற்று... மேலும் பார்க்க

‘சிமி’ தடை நீட்டிப்பு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புது தில்லி: பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவா் இயக்கத்துக்கு (சிமி) ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. சட்டவிரோத செயல்கள... மேலும் பார்க்க

மாணவா்கள் தற்கொலை விவகாரம்: விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: ஐஐடி-தில்லி, ஐஐடி-கரக்பூா் (மேற்கு வங்கம்) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவா்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் காவல் துறை... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடா்பான தீா்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. நேஷனல... மேலும் பார்க்க