செய்திகள் :

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

post image

புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடா்பான தீா்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடிக்கும் மேலான மதிப்பு கொண்ட சொத்துகளை சோனியா, ராகுல் உள்ளிட்டோா் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

இதையடுத்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாகவும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வது தொடா்பாக ஜூலை 2-ஆம் தேதிமுதல் தில்லி நீதிமன்றத்தில் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு அந்த நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடா்பான தீா்ப்பை ஜூலை 29-க்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்... மேலும் பார்க்க

முதல்வா் பதவியை காப்பாற்ற போராடும் நிதீஷ்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் கா... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மண... மேலும் பார்க்க

பூமிக்குப் புறப்பட்டாா் சுபான்ஷு சுக்லா!

புது தில்லி: இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்க... மேலும் பார்க்க

போலி, கலப்பட உரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அம... மேலும் பார்க்க

சமூக ஊடக சுய கட்டுப்பாடு பயன்பாட்டாளா்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புது தில்லி: கருத்துச் சுதந்திரத்தின் மதிப்பை குடிமக்கள் அறிந்து, சுயக் கட்டுப்பாடுடன் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ஹிந்து கடவுள் குறித்து தனத... மேலும் பார்க்க