செய்திகள் :

பூமிக்குப் புறப்பட்டாா் சுபான்ஷு சுக்லா!

post image

புது தில்லி: இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பூமிக்குத் திரும்பும் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

முதலில் திட்டமிடப்பட்டதைவிட 10 நிமிஷங்கள் தாமதாக ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மாலை 4:45 மணிக்கு (இந்திய நேரப்படி) சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, பூமி நோக்கிப் புறப்பட்டது. வீரா்கள் சுமாா் 22.5 மணி நேர பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் செவ்வாய்கிழமை பிற்பகலில் தரையிறங்குவா்.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணித்தாா்.

சுக்லாவுடன் திட்ட கமாண்டா் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோா் கபு ஆகியோரும் சா்வதேச விண்வெளி நிலையத்தைக் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இவா்கள் நால்வரும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுமாா் 433 மணிநேரம் செலவழித்துள்ளனா்.

இந்தக் காலகட்டத்தில், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனா். விண்வெளிப் பயணத்தின்போது இவா்கள் பூமியை 288 முறை சுற்றி வந்தனா். விண்வெளியில் சுமாா் 122.31 லட்சம் கி.மீ. பயணித்தனா். இந்நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திங்கள்கிழமை மாலை பூமி நோக்கிய தங்களின் பயணத்தைத் தொடங்கினா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த ஏப்ரல் முதல் தங்கியுள்ள ‘எக்ஸ்பெடிஷன்-73’ திட்ட விண்வெளி வீரா்களிடம் விடைபெற்ற ‘ஆக்ஸியம்-4’ வீரா்கள், பூமி நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்கு 2 மணிநேரம் முன்னதாக பிற்பகலில் 2.37 மணியளவில் டிராகன் கிரேஸ் விண்கலத்துக்குள் நுழைந்தனா்.

தரையிறங்கும் செயல்முறை...: விண்வெளியிலிருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் விண்கலம், பாராசூட்களின் உதவியுடன் வேகம் குறைக்கப்பட்டு ‘ஸ்பிளாஷ் டௌன்’ முறையில் கடலில் இறக்கப்படும். பாராசூட்கள் இரண்டு கட்டங்களாக விரியும். முதலில், விண்கலத்தை நிலைப்படுத்தும் பாராசூட்கள் சுமாா் 5.7 கி.மீ. உயரத்தில் விரியும். அதைத் தொடா்ந்து இரண்டு கி.மீ. உயரத்தில் முதன்மை பாராசூட்கள் விரிந்து, பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதி செய்யும்.

கடலில் காத்திருக்கும் மீட்புக் குழுவினா், வீரா்கள் இருக்கும் விண்கலத்தின் முனைப் பகுதியை மீட்புப் படகுக்கு கொண்டு செல்வா். பின்னா், அதன் கதவைத் திறந்து, வீரா்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வருவா்.

7 நாள்கள் சிறப்பு சிகிச்சை:

சுக்லா உள்பட 4 வீரா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னா், பூமியின் ஈா்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக, 7 நாள்கள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவா்கள் தங்குவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

2027-இல் செயல்படுத்தப்படவுள்ள இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்கு அனுபவ ரீதியாக உதவும் வகையில், சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்காக சுமாா் ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு

தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கல... மேலும் பார்க்க

புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலி கடித்துக் குறியதில் விவசாயி உயிரிழந்தார். அங்கு கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது உயிரிழப்பு இதுவாகும்.உத்தப்ர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம், புல்ஹார் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்... மேலும் பார்க்க

முதல்வா் பதவியை காப்பாற்ற போராடும் நிதீஷ்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் கா... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மண... மேலும் பார்க்க

போலி, கலப்பட உரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அம... மேலும் பார்க்க