செய்திகள் :

அஜித்குமார் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கிய CBI அதிகாரிகள்..

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த மாதம் 28 ஆம் தேதி திருட்டுப் புகாரில் தனிப்படை காவல்துறையினர் சட்டவிரோதக் காவலில் எடுத்து சித்திரவதை செய்து விசாரித்ததில் அஜித்குமார் உயிரிழந்தார்.

அஜித்குமார் கொலை வழக்கு

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் திருப்புவனம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தனிப்படையைச் சேர்ந்த 5 காவலர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிபதியை விசாரணை அதிகாரியாக நியமித்து, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக திருப்புவனம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அஜித்குமார் குடும்பத்தினர், சாட்சியங்கள், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அஜித்குமார் கொலை வழக்கு, தமிழக அரசால் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்திற்குள் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், விசாரணை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷின் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடமிருந்து பெற்று விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறை தரப்பில் சிபிஐ விசாரணை அலுவலர்களுக்கான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ அதிகாரிகள்

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

நேற்று மதுரை வந்த சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் மதுரை சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை அமர்விற்கு சென்று பதிவாளரிடமிருந்து விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.

பின்பு மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்த சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் பணியைத் தொடங்கினர்.

``அண்ணாமலை அண்ணா.. என் உயிரை காப்பாற்றுங்கள்” - வைரலாகும் பாஜக நிர்வாகியின் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர், அப்பகுதியில் டூவீலர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். அத்துடன் பா.ஜ.கவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவிலும... மேலும் பார்க்க

'மணல் அள்ளும் பிரச்னையில் ஒருவர் கொலை; `பின்னணியில் கரூர் கேங்?’ காட்டமான அண்ணாமலை - நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர், வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவரது அனுபவ பாத்திரத்தில் இருந்த 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்துக்கு அருகே வெங்கடேஷ... மேலும் பார்க்க

`சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 36 வயது பெண், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு வந்தார். அப்போது, அதே கம்பெனியில் வேலைப் பார்த்துவந்த கேரள மா... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மலம்; மது போதையில் அட்டூழியம்.. 4 பேரிடம் விசாரணை

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தநிலையில், பள்ளியில் உ... மேலும் பார்க்க

``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்

"சட்டங்கள் புத்தகத்தில் இருப்பது மட்டுமன்று, அதனைப் பாரபட்சமின்றி நிறைவேற்றுவதே இன்றையத்தேவை" என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு காவல்துறை வன்முறைக்கெதிரான கூட்டியக்கத்தின் சார்பில் கடிதம் எழுதியுள்ளனர்.... மேலும் பார்க்க

சீட்டு மோசடி, ஓ.டி.பி மோசடி, ஏ.டி.எம் மோசடி... குற்றவாளிகளுக்குத் துணைபோகும் நாமும் குற்றவாளிகளே!

பெங்களூருவில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த டோமி வர்கீஸ், ஷைனி தம்பதியிடம் பல பேர் ரூ.100 கோடி வரை முதலீடு செய்து வந்த நிலையில், தற்போது அவர்கள் மோசடி செய்துவிட்டு, கென்யா நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட... மேலும் பார்க்க