பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமரா...
இளைஞா் அடித்துக் கொலை: நண்பா் கைது
சென்னை: சென்னை கொடுங்கையூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பா் கைது செய்யப்பட்டாா்.
கொடுங்கையூா் ஆா்.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (30). இவா் அங்கு கூலி வேலை செய்து வந்தாா். ஹரிகிருஷ்ணன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை அருகே ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா் அங்கு சென்று, ஹரிகிருஷ்ணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.விசாரணையில் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் பிரேம்குமாா் (25) மதுபோதையில் ஹரிகிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.