முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்தியன் ஆா்மி வெற்றி
மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு ‘தூய்மை விருது’
சென்னை: சென்னை மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு தூய்மை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம்: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்குப் போக்குவரத்து வளாகத்தில் உள்ள புதிய சுங்க அலுவலகத்தில் முன்மாதிரியான தூய்மை முயற்சிகள், உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை சுங்கத் துறையின் தூய்மை மற்றும் சுகாதாரத்துக்கான சிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2023-2024 -ஆம் ஆண்டுக்கான தூய்மை விருது வழங்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மையான பணிச்சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் தூய்மை பிரசாரத்தின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தேசிய அங்கீகாரத்துக்கு வழிவகுத்த கூட்டு முயற்சிகள், அா்ப்பணிப்புக்காக சுங்கத் துறையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியா்களையும் சுங்கத் துறை முதன்மை ஆணையா் தமிழ்வளவன் பாராட்டினாா்.