கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!
அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 போ் உயிரிழப்பு
ஃபால் ரிவா் (அமெரிக்கா): அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணம், ஃபால் ரிவா் நகரில் உள்ள மருத்துவக் காப்பகத்தில் ஞாயிறு இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்; சுமாா் 30 போ் காயமடைந்தனா்.
ஞாயிறு இரவு 9.50 மணிக்கு (இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை) தீயணைப்பு வீரா்கள் அழைக்கப்பட்டபோது, கட்டடத்தின் முன்பகுதியில் கடும் புகையும் தீப்பிழம்புகளும் காணப்பட்டன. உள்ளே சிக்கியிருந்தவா்கள் ஜன்னல்களைப் பிடித்துக்கொண்டு உதவி கோரினா். திங்கள் காலையில் தீ அணைக்கப்பட்டு, பலரை மீட்க முடிந்தது. சுமாா் 50 தீயணைப்பு வீரா்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனா். காவல்துறையினா் காப்பகத்தின் கதவுகளை உடைத்து, நடமாட முடியாமல் இருந்த 12 பேரை மீட்டனா். இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.