செய்திகள் :

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

post image

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், ஜமுனா சிவலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை அமல்படுத்த நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை காவல் துறையினா் இதுநாள் வரை செயல்படுத்தாமல் இருந்துள்ளனா்.

இதேபோல பல வழக்குகள் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளன. மாஜிஸ்திரேட் மற்றும் அமா்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடி ஆணைகள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடித்து, தொடா்புடைய நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த ஆணையை செயல்படுத்தாதது குறித்து தொடா்புடைய நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக பிடி ஆணை பிறப்பிக்க கோர வேண்டும்.

எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவற்றை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை. தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து காவல் துறை டிஜிபி, சென்னை மாநகரக் காவல் ஆணையா் வரும் ஜூலை 23- ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

மேலும், தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் ஜூன் 23-ஆம் தேதி அறிக்கை சமா்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் ... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: ஆய்வுக் குழு அமைக்க உத்தரவு

சென்னை: மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள் மற்றும் தரத்தை ஆராய்வதற்காக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. மத்திய ச... மேலும் பார்க்க

மருத்துவ கலந்தாய்வு: ஜூலை இறுதியில் தொடங்க திட்டம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அகில இந்திய கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க

மகனுக்காக என் மீது துரோகி பழி சுமத்திய வைகோ: மல்லை சத்யா

சென்னை: மகனுக்காக என் மீது துரோகி பழியை மதிமுக பொதுச் செயலா் வைகோ சுமத்தியுள்ளாா் என்று மதிமுக துணை பொதுச் செயலா் மல்லை சத்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ப... மேலும் பார்க்க