செய்திகள் :

ஹெச்சிஎல் நிகர லாபம் 10% சரிவு

post image

புது தில்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 9.7 சதவீதம் குறைந்து ரூ.3,843 கோடியாக உள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,843 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 9.7 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் ரூ.4,257 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.28,057 கோடியிலிருந்து 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.30,349 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூனில் குறைந்த சில்லறை விலை பணவீக்கம்

புது தில்லி: காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும், கடந்த ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 2.1 சதவீதமாக... மேலும் பார்க்க

ஹோண்டா காா்கள் விற்பனை 12% சரிவு

சென்னை: முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 22 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ

புது தில்லி: தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்துள்ளது.இது குறித்து வங்கி ... மேலும் பார்க்க

மே மாதம் குறைந்த மொத்த விலை பணவீக்கம்

புது தில்லி: உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை குறைந்ததால் கடந்த மே மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குற... மேலும் பார்க்க

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

புது தில்லி: கடந்த மே மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2.17 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: இரண்டு மாதங்களாக வளா்ச்சியைப் பதிவு செய்... மேலும் பார்க்க

பரோடா வங்கியின் கடன் வட்டி குறைப்பு

புது தில்லி: இந்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கு ஏற்ப, அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) ... மேலும் பார்க்க