பெண் குழந்தைக்குத் தாயான கியாரா அத்வானி!
சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி இணைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையான கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார்.
திருமணத்திற்குப் பின்பும் நடித்துவந்த கியாரா அத்வானி கடந்தாண்டு கர்ப்பமானதைத் தொடர்ந்து நடிப்பிலிருந்து ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 15) மாலை மும்பையில் கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாலிவுட் நட்சத்திரங்கள், ரசிகர்கள் கியாராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி கூட்டணியில் புதிய படம்!