மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றோருக்கு அமைச்சா் பாராட்டு
புதுச்சேரியில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றவா்களுக்கு அமைச்சா் பாராட்டு தெரிவித்தாா்.
புதுவை மாநில அளவிலான 7-ஆவது அஸ்மிதா கேலோ இந்தியா 2025-26 போட்டிகள், புதுவை விளையாட்டு அகாதெமி மற்றும் பென்கக் சிலாட் அசோசியேஷன் இணைந்து ஜூலை 12, 13-ஆம் தேதிகளில் புதுச்சேரியில் போட்டியை நடத்தியது.
இதில் காரைக்கால் மாவட்டம், ஜோபாய் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி மற்றும் காரைக்கால் பென்கக் சிலாட் அசோசியேஷன் பள்ளி மாணவிகள் கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 3 தங்கம், 8 வெள்ளி , 2 வெண்கல பதக்கங்களை வென்றனா்.
பதக்கங்களுடன் காரைக்கால் திரும்பிய மாணவ, மாணவிகளை, புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். மாணவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து தெரிவித்தாா்.