இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
ஹிமந்தா நிச்சயம் சிறைக்குச் செல்வார்: ராகுலின் கூற்றுக்கு அஸ்ஸாம் முதல்வர் பதில்!
மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தின்போது ஹிமந்தா நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு அஸ்ஸாம் முதல்வர் பதில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்தாவின் எக்ஸ் பதிவில்,
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்துள்ளதை ராகுல்காந்தி மறந்துவிட்டார்.
எழுத்துப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுங்கள்.. ஹிமந்தா பிஸ்வா சர்மா நிச்சயமாகச் சிறைக்கு அனுப்பப்படுவார். இவைதான் அஸ்ஸாமில் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசிய வார்த்தைகள்..
இதைச் சொல்வதற்காகத் தான் அவர் அஸ்ஸாமுக்கு வந்தார். ராகுலுக்கு எனது வாழ்த்துகள். அஸ்ஸாமுக்கு வருகை தந்துள்ள நீங்கள் இன்று முழுவதும் விருந்தோம்பலை நன்கு அனுபவியுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாட ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஒருநாள் பயணமாக அஸ்ஸாம் வந்துள்ளனர்.
இன்றைய முதல் கூட்டம் குவஹாத்தி விமானநிலையத்திற்கு அருகிலுள்ள உணவகத்திலும், இரண்டாவது கூட்டம் சாய்கானிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.