இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
இனி அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் ரூ.200 மட்டுமே! ஆனால் இங்கில்லை..
கர்நாடகத்தில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறித்து பொதுமக்களிடம் அம்மாநில அரசு கருத்துக்கேட்பு நடத்தப்படவுள்ளது.
வாரம் முழுவதும் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சாமானியர்களுக்கு வார இறுதி நாள்களில் புத்துணர்ச்சி தருவதில் சினிமாவும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், திரையரங்குகளில் படத்துக்கான டிக்கெட் விலை நாளுக்கேற்றவாறு மாறுவது மட்டுமல்லாமல், சில திரையரங்குகளில் அதிக விலையும் நிர்ணயிப்பது சினிமா ரசிகர்களுக்கு பெருந்துயரை அளித்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் அனைத்து வகையான திரையரங்குகளிலும் ஒரே மாதிரியான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டுள்ள கர்நாடக அரசு, இதன் மீது 15 நாள்களில் பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிவதால், பெங்களூரில் பல மொழித் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
ஆனால், திரையரங்குகளில் டிக்கெட்டின் கட்டணம் வார நாள்களில் ஒரு விலையிலும், வார இறுதியில் ஒரு விலையிலும், புதிய படங்கள் வெளியீட்டின்போது ஒரு விலையிலும் நிர்ணயிக்கின்றனர். இதனால், சினிமா ரசிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாய்த் தெரிகிறது. ஐமேக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் ஒரு படத்துக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரையில் டிக்கெட் விலை நிர்ணயிக்கின்றனர்.
இந்த நிலையில்தான், கர்நாடகத்தில் அனைத்து மொழிப் படங்களுக்கான மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான திரையரங்குகளிலும், பொழுதுபோக்கு வரி உள்பட அனைத்தும் சேர்த்து ரூ.200-க்குள் தான் கட்டணம் வசூலிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துக்கேட்புக்குப் பிறகு, அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து, அதனை கர்நாடக அரசு சட்டமாகக் கொண்டு வரும்.