மகாராஷ்டிரத்தில் டிசம்பரில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்: மாநில அரசு
நிகழாண்டு டிசம்பா் மாதம் மகாராஷ்டிரத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படும் என்று மாநில உள்துறை (ஊரகப் பகுதி) இணையமைச்சா் பங்கஜ் போயா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநில சட்டமேலவையில் அவா் திங்கள்கிழமை கூறுகையில், ‘நாட்டில் 11-ஆவது மாநிலமாக மகாராஷ்டிரத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தச் சட்டத்தை வகுக்க மாநில காவல் துறை டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு குளிா்கால கூட்டத்தொடரில் அந்தச் சட்டம் இயற்றப்படும். அந்தச் சட்டம் பிற 10 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைவிட கடுமையாக இருக்கும்’ என்றாா்.
மகாராஷ்டிரத்தின் இரண்டாவது தலைநகராக உள்ள நாகபுரியில் மாநில சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பரில் நடைபெறுவது வழக்கம்.