செய்திகள் :

Zomato: ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், பும்ரா.. விளம்பரம் டிரெண்டிங் ஆனது ஏன்? - CEO சொன்ன காரணம்

post image

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது புதிய விளம்பரமான ஃப்யூவல் யுவர் ஹஸ்டல் (Fuel your Hustle) மூலம் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த விளம்பரத்தில் இந்தியாவின் முன்னணி பிரபலங்களான நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிரிக்கெட் வீரர் பும்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த விளம்பரம் வெற்றியின் பின்னணியில் உள்ள கடின உழைப்பு மற்றும் முயற்சியை எடுத்துக்காட்டு விதமாக அமைந்துள்ளது.

ஸொமேட்டோ

ஸொமேட்டோவின் இந்த விளம்பரம் கிரிக்கெட் வீரர் பும்ராவின் காட்சிகளுடன் தொடங்கி, ஷாருக்கான் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுகிறது. ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரின் காட்சிகள் வருகின்றன.

இவர்களின் வெற்றிக்கு ரகசியமான மூலக்கூறு என்ன? புரட்சிகரமான வெற்றிக்கு மந்திரம் என்ன? என்று பின்னணி குரல் கேள்வி எழுப்ப, அதனை தொடர்ந்து இந்த பிரபலங்களின் பழைய பேட்டிகள் மேடை நிகழ்ச்சிகள் அதில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமில்லாமல் அவர்களின் வெற்றி உணர்ச்சிகரமான தருணங்கள், தோல்விகள், போராட்டங்கள் என எல்லாம் அதில் வெளிப்பட்டன.

அதன் பின்னர் அவர்கள் ஒரு வெற்றியை அடைந்த காட்சிகளும் இடம்பெற்றன.

ஸொமேட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் இந்த வீடியோவை பகிர்ந்து "இது ஒரு விளம்பரமல்ல முயற்சியின் மீதான நம்பிக்கை என்று பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் கனவுகள், பொறுப்புகள் அன்றாட வாழ்க்கையின் இடையில் சோமேட்டோவில் ஆர்டர் செய்கிறார்கள். சிலர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குகிறார்கள். சிலர் குழந்தை வளர்கிறார்கள். சிலர் ஓய்வு எடுக்கிறார்கள் ஆனால் அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது தொடர்ந்து முயற்சி செய்வது.. நட்சத்திரங்களைக் கொண்டாட நாங்கள் இங்கு இல்லை, ஆனால் அவற்றை உருவாக்கிய நெருப்பைக் கொண்டாடுகிறோம்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

உலக எமோஜி தினம் 2025: மக்களின் உணர்வுகளை எளிதில் சொல்லும் எமோஜிகள் - எப்போது தொடங்கியது தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் தொடங்கி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த எமோஜிகளை பயன்படுத்துகின்றோம். வார்த்தைக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பையில் கடந்த வாரம் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் சட்டமன்ற உறுப்பினர் விடுதி கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது.இதையடுத்து சஞ்சய்... மேலும் பார்க்க

3000 பீர்கேன்கள், மலம், சிறுநீர் பைகள்; வீடு வாடகைக்கு விட்ட தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களின் மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்ட... மேலும் பார்க்க

கேரளா: 3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்; மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?

கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியில் ஒரு ஆச்சரியச் சம்பவம் நடந்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணி என்ற பெண்மணி தனது வீட்டின் முற்றத்தில் வேலை செய்து கொண்ட... மேலும் பார்க்க

Tesla : காரின் ஆரம்ப விலை ரூ.59.89 லட்சம்... மும்பையில் இந்தியாவின் முதல் டெஸ்லா கார் ஷோரூம்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்க திட்டமிட்டு இருந்தது. எப்போது கார் விற்பனை தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டெஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஓடும் பேருந்தில் பிரசவம்; ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய பெற்றோர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் இருந்து புனே நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ரிதிகா என்ற பெண் பயணம் செய்தார். அவருடன் அவரது கணவர் அல்தாப் ஷேக் என்பவரும் பயணம் செய்... மேலும் பார்க்க