செய்திகள் :

புகழ்பெற்ற மாரத்தான் வீரர் பலியான விவகாரம்: வெளிநாடுவாழ் இந்தியர் கைது!

post image

உலகப் புகழ்பெற்ற மிகவும் வயதான மாரத்தான் வீரர் பலியான விவகாரத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்தனர்.

புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங் பலியான விவகாரத்தில் 30 வயதுடைய வெளிநாடுவாழ் இந்தியர் அமிர்த்பால் சிங் தில்லான் என்பவரை சம்பவம் நடந்த 30 மணி நேரத்திற்குள் பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்து, விபத்துக்கு காரணமான ஃபார்ச்சூனர் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் கர்தார்பூரில் உள்ள தாஸுபூர் கிராமத்தைச் சேர்ந்தவரான அமிர்த்பால் சிங் தில்லான், செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டு, தற்போது போக்பூர் காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், போலீஸ் காவலில் எடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜலந்தர் காவல் துறையினர் கபுர்தலாவுக்குச் சென்று வரீந்தர் சிங்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, கனடாவிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த அமிர்த்பால் சிங் தில்லான் என்ற வெளிநாடுவாழ் இந்தியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு காரை விற்றுவிட்டதாக வரீந்தர் தெரிவித்தார்.

விசாரணையில் போக்பூரிலிருந்து கிஷாகர்கருக்குச் சென்று கொண்டிருந்த தில்லான், பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பியாஸ் கிராமத்தில் ஃபௌஜா சிங் மீது மோதியுள்ளார்.

அவர் 5 முதல் 7 அடி வரை தூக்கி வீசப்பட்டுள்ளார். மேலும், ஃபௌஜா சிங் மீது காரை ஏற்றியதையும் தில்லான் ஒப்புக்கொண்டுள்ளார். தில்லானுக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும், அவரது தாயார் கனடாவில் வசிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிஎன்எஸ் பிரிவுகள் 281 கீழ் பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் 105 கீழ் கொலை வழக்கு ஆகியவற்றில் தில்லான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

NRI arrested in hit-and-run death of legendary marathoner Fauja Singh

இதையும் படிக்க :உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

தங்கக் கோயிலுக்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள, சீக்கியர்களின் புனிதத் தலமான தங்கக் கோயிலுக்கு மூன்றாவது முறையாக, இன்று (ஜூலை 16) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமிர்தசரஸ் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உத்தரகண்டில் உள்ளாட்சித் தேர்தல்! இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான எல்லையானது தற்காலிகமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகண்டில் வரும் ஜூலை 24 மற்றும் 28 ஆகிய தேதிக... மேலும் பார்க்க

ஹிமந்தா நிச்சயம் சிறைக்குச் செல்வார்: ராகுலின் கூற்றுக்கு அஸ்ஸாம் முதல்வர் பதில்!

மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தின்போது ஹிமந்தா நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு அஸ்ஸாம் முதல்வர் பதில் கூறியுள்ளார். இதுத... மேலும் பார்க்க

இனி அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் ரூ.200 மட்டுமே! ஆனால் இங்கில்லை..

கர்நாடகத்தில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறித்து பொதுமக்களிடம் அம்மாநில அரசு கருத்துக்கேட்பு நடத்தப்படவுள்ளது.வாரம் முழுவதும் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சாமானியர்களுக்கு வார இறுதி நாள்களில்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ தனி அறக்கட்டளை: டாடா குழுமம்

ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ புதிதாக அறக்கட்டளை ஒன்றை நிறுவ டாடா குழுமம் ஆலோசித்து வருவதாக டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாத... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை! மகளையும் கொன்று கேரளத்துப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வரதட்சிணை கொடுமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளத்துப் பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளம் மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) என்பவர், 2020-ல்... மேலும் பார்க்க