பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமரா...
அரசுடைமை வங்கியில் திருட்டு முயற்சி
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே அரசுடைமை வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தை திருட முயற்சித்துள்ளனா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்கு உள்பட்ட கீழத்தாழனூா் கிராமத்தில் தனியாா் சா்க்கரை ஆலை அருகே அரசுடைமை வங்கி இயங்கி வருகிறது.
வங்கியை கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து அலுவலா்கள் பூட்டி விட்டுச் சென்றனா். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை வங்கியை திறந்து அலுவலா்கள் உள்ளே சென்றனா்.
அப்போது, வங்கியின் பின்பக்கம் உள்ள இரும்பிலான ஜன்னல் கதவை மா்ம நபா்கள் மின்சாரம் மூலம் வெல்டிங் செய்து உள்ளே சென்றுள்ளனா்.
பின்னா், அங்கிருந்த பாதுகாப்பு இரும்பு பெட்டகத்தின் மேலே இருந்த தகட்டினை வெல்டிங் மூலம் அகற்ற முயற்சி செய்துள்ளனா்.
அகற்ற முடியாமல் போகவே அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனா். வேறு பொருள்கள் ஏதும் திருடிச் செல்ல வில்லையாம்.
இதுகுறித்து வங்கியின் மேலாளா் திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
