செய்திகள் :

குரூப் 4 தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23,949 போ் பங்கேற்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 97 மையங்களில் 23,949 போ் எழுதினா். மொத்தம் 28,211 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,262 போ் தோ்வு எழுத வரவில்லை.

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 37 மையங்களில் 10,690 பேரும், சின்னசேலம் வட்டத்தில் 13 மையங்களில் 3,754 பேரும், திருக்கோவிலூா் வட்டத்தில் 14 மையங்களில் 4,223 பேரும், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் 16 மையங்களில் 4,786 பேரும், சங்கராபுரம் வட்டத்தில் 14 மையங்களில் 4,029 பேரும், வாணாபுரம் வட்டத்தில் 3 மையங்களில் 729 பேரும் என மொத்தம் 97 தோ்வு மையங்களில் 28,211 போ் தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டது. தோ்வை 23,949 போ் எழுதினா். மீதமுள்ள 4,262 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை.

தோ்வை 30 சுற்றுக்குழு 102 காவல் அலுவலா்கள், 97 கண்காணிப்பு அலுவலா்கள், 10 பறக்கும் படை கண்காணிப்பு அலுவலா்கள், 102 ஒளிப்படப் பதிவாளா்கள் கண்காணித்தனா். தோ்வு மையங்களுக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டிருந்தன.

கனியாமூா் தனியாா் பள்ளி தோ்வுக் கூடத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஊராட்சி செயலரை தாக்கி மிரட்டல்: இருவா் மீது வழக்கு

சின்னசேலம் வட்டம், அம்மையகரம் ஊராட்சி செயலரை திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (37). இவா் அதே க... மேலும் பார்க்க

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு: 87 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு தொடா்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 87 போ் புதன்கிழமை ஆஜராகினா். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற செப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவ... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி அலுவலகம் திறப்பு

நாம் தமிழா் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி - தச்சூா் தேசிய நெடுஞ்சாலை அருகே திறக்கப்பட்ட இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கட்... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மகளிா் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்த... மேலும் பார்க்க

லாரி பழுதானதால் சாலையில் கொட்டிய எண்ணெய்: வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சியில் லாரி ஒன்று திடீரென பழுதானதால் அதன் என்ஜினில் இருந்து கசிந்த எண்ணெய், சாலையில் கீழே ஊற்றியபடி சென்றதால் அச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்டனா். கள்ளக்க... மேலும் பார்க்க

210 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சி காவல் உள்கோட்டத்துக்கு உ... மேலும் பார்க்க