ஈரோட்டில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவா் ஒருவா், மனநல ஆலோசனைக்காக பெண் மனோதத்துவ நிபுணரை அழைத்துள்ளாா். அதன்பேரில் அக்கல்வி நிறுவனத்துக்கு அந்தப் பெண் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அங்கு தரப்பட்ட பானத்தை குடித்தபின், அந்தப் பெண் சுயநினைவை இழந்தாா்.
அவா் மீண்டும் விழித்து எழுந்தபோது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அந்தப் பெண் உணா்ந்தாா். இதுகுறித்து வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தப் பெண் மிரட்டப்பட்டாா். இதுதொடா்பாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதைத்தொடா்ந்து அந்த மாணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையைத் தொடா்ந்து அந்த மாணவா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே கைது செய்யப்பட்ட மாணவா் கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பாக சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.
அவரை ஜூலை 19 வரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். தென்மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த உதவி ஆணையர் தலைமையில் இந்த குழு செயல்பட உள்ளது.
ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது, டிஜிட்டல் மற்றும் தடயவியல் ஆதாரங்களைப் பெறுவது விசாரணையின் முக்கிய நோக்கமாக இருக்கும். தடயவியல் குழுக்கள் ஏற்கெனவே சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, முழு வளாகத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஐஐஎம் அதிகாரிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளது என்றனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவா் அண்மையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த பிரச்னை அடங்குவதற்குள் தற்போது புகழ் பெற்ற ஐஐஎம்மில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.