Ajith: "சென்னைக்கு வரியா..." - பூனையிடம் க்யூட்டாக பேசிய அஜித்
இந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகிய நிலையில், நடிகர் அஜித் குமார், படப்பிடிப்புகளில் இருந்து விலகி கார் ரேசிங் மற்றும் பைக் ரைடிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஜூன் 7ம் தேதி அஜித் ரொமேனியா, பல்கேரியா நாடுகளில் பைக் ரைட் செய்யப்போவதாக அவரது வீனஸ் மோட்டார் சைக்கிள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பைக் ரைட் செய்யும் காஸ்ட்யூமுடன் அஜித் ஒரு பூனைக் குட்டியை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அஜித் குமார் பூனையை மடியில் வைத்துக்கொண்டு, "நீ இந்தியா வருகிறாயா, சென்னை வருகிறாயா... நான் உன்னை சென்னையில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்" எனக் கேட்கிறார். பூனையின் அசைவுகளை அவர் மெச்சுவது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#Ajith Sir #AjithKumar#Ak#Thala#RideWithVenus@VenusMotoTourspic.twitter.com/xIni6jWxsW
— AJITHKUMAR TEAM ONLINE (@AkTeamOnline) July 13, 2025
வீனஸ் மோடார் சைக்கிள் ஒரு பைக், கார் ரைடிங் சுற்றுலா நிர்வாக அமைப்பாகும். இந்தியாவுக்குள்ளும், உலக நாடுகளிலும் பைக் ரைட் செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கும் ஒரு நிறுவனம்.
நடிகர் அஜித் குமார் சினிமாவைக் கடந்து பைக் ரைடிங், கார் ரேசிங், துப்பாக்கிசூடு, விமான பொறியியல் என பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.