செய்திகள் :

திபெத் விவகாரத்தால் இந்தியாவுடனான உறவில் சிக்கல்: சீனா

post image

அடுத்த தலாய் லாமா தோ்வு உள்பட திபெத் தொடா்பான விவகாரங்களால் இந்தியாவுடனான இருதரப்பு உறவில் சிக்கல்கள் நீடித்து வருவதாக சீன தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சீனாவின் தியான்ஜினில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்தது.

கிழக்கு லடாக்கில் கடந்த 2020-இல் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீனாவுக்கு முதல் முறையாக அமைச்சா் ஜெய்சங்கா் பயணிக்கவுள்ளாா்.

கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடா்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஹிமாசல பிரதேசத்தில் தனது 90-ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய 14-ஆவது தலாய் லாமா, ‘என்னுடைய மறைவுக்குப் பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என தெரிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சீனா அடுத்த தலாய் லாமா வாரிசு தங்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும் எனத் தெரிவித்தது.

அதேபோல் 14-ஆவது தலாய் லாமாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியதற்கும் சீனா கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், சீன தூதரக செய்தித்தொடா்பாளா் யூ ஜிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அடுத்த தலாய் லாமா தோ்வு உள்பட திபெத் தொடா்பான விவகாரங்கள் குறித்து இந்திய அரசின் உயா் பதவிகளில் இருப்போா் மிகவும் கவனமாக கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஏனெனில், திபெத் பிரச்னை சீனாவின் உள்நாட்டு விவகாரம் சாா்ந்தது. அதில் வேறு நாடுகள் கருத்து தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாக இந்தியாவுடனான இருதரப்பில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன’ என குறிப்பிட்டாா்.

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க