செய்திகள் :

பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் ராஜு மரணம்; விஷால், ஸ்டண்ட் சில்வா இரங்கல்

post image

நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தம்மாவடியில் நடைபெற்ற படபிடிப்பில் சண்டைப் பயிற்சி கலைஞர் ராஜு உயிரிழந்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா நடிக்கும் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாகை மாவட்டத்தைச் சுற்றிய ஊர்களில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பில் பா.ரஞ்சித்

இன்று எடுக்கப்பட்ட கார் ஸ்டண்ட் காட்சியில், பணியாற்றும்போது ஏற்பட்ட விபத்தில் மோகன் ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

நாகை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் படப்பிடிப்பில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டண்ட் மாஸ்டரின் உடல் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டண்ட் மாஸ்டர் எஸ்.எம்.ராஜு

இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினரிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில், "இன்று காலை ஆர்யா மற்றும் ரஞ்சித்தின் படப்பிடிப்பில் கார் கவிழும் காட்சியை எடுக்கும்போது ஸ்டண்ட் கலைஞர் ராஜு உயிரிழந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவருடன் நீண்டநாள் பழக்கம் உள்ளது. எனது படங்களில் மிகவும் ரிஸ்கான ஸ்டண்ட்களைச் செய்துள்ளார். மிகவும் தைரியமான ஆளுமை அவர். அவரது இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு கடவுள் மேலும் வலிமை அளிக்கட்டும். இந்த ட்வீட் மட்டுமல்ல, இதுவரை அவர் படங்களுக்கு அளித்த பங்களிப்புக்காக அவரது குடும்பத்தின் எதிர்காலத்துக்காக திரைத்துறை அவர்கள் பக்கம் நிற்கும். எனது இதயத்தின் ஆழத்திலிருந்து அவர்களுக்கு என் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என ட்வீட் செய்திருந்தார் விஷால்.

ஸ்டண்ட் கலைஞர் சில்வா, "எங்கள் சிறந்த கார் ஜம்பிங் ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவரான எஸ்.எம். ராஜு இன்று கார் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தபோது காலமானார்.

ஸ்டண்ட் கலைஞர்கள் யூனியனும் இந்திய திரைப்படத்துறையும் அவர் பிரிவால் தவிக்கும்..." என ட்வீட் செய்துள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Monica: Pottala Muttaye: ”விஜய் ஆண்டனி சார் என்கரேஜாலதான் வேலையை விட்டேன்" - பாடகி சுப்லாஷினி

’கோல்டன் ஸ்பாரோ...’... ‘கிஸ்ஸுக்...’... ‘பொட்டல மிட்டயே...’... ‘மோனிகா...’ என செம்ம ஸ்டைலிஷ் குதூகலப் பாடல்களைப் பாடி ரசிகர்களை வைப்லேயே வைத்திருப்பதன் மூலம் முன்னணி இசையமைப்பாளர்களின் மோஸ்ட் வாண்டட் ... மேலும் பார்க்க

Thalaivan Thalaivi: "நித்யாவுடன் சேர்ந்து நடிக்க நீண்டநாள் நினைத்திருந்தேன்" - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, நித்யா மெனென், காளி வெங்கட், சரவணன், ரோஷினி, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ள திரைப்படம் 'தலைவன் தலைவி'. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாரயணன... மேலும் பார்க்க

Ajith: "சென்னைக்கு வரியா..." - பூனையிடம் க்யூட்டாக பேசிய அஜித்

இந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகிய நிலையில், நடிகர் அஜித் குமார், படப்பிடிப்புகளில் இருந்து விலகி கார் ரேசிங் மற்றும் பைக் ரைடிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். க... மேலும் பார்க்க

Kota Srinivasa Rao: "வில்லன், காமெடி, குணச்சித்திரம்... ஒரே ஷாட்டில் நடித்துவிடுவார்" - சத்யராஜ்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 83. நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். நாட்டின் உயரிய வி... மேலும் பார்க்க

Kota Srinivasa Rao: "ஒரு லெஜண்டை இழந்திருக்கிறோம்" - கோட்டா சீனிவாச ராவ் மறைவு குறித்து கார்த்தி

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 83. நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள... மேலும் பார்க்க

மாயக்கூத்து விமர்சனம்: ஃபேண்டஸி படம் பேசும் `எழுத்து' அரசியல்; தமிழுக்கு இது கொஞ்சம் புதுசுதான்!

வார இதழ்களுக்குத் தொடர்கதை எழுதிவரும் எழுத்தாளர் வாசன் (நாகராஜ் கண்ணன்), தான் ஒரு படைப்பாளன், தான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் வழியே தானும் ஒரு கடவுள் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார். அவரது ஒரு கதையில்... மேலும் பார்க்க