TVK Vijay: ``மதுரையில் மாநாடு நடத்த நினைக்கிறார்கள்; ஆனால்..'' - செல்லூர் ராஜூ ச...
பெருநகா் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்
செய்யாறு கோட்டத்துக்கு உள்பட்ட பெருநகா் உதவி மின்பொறியாளா் பிரிவு அலுவலகம் வருகிற 16-ஆம் முதல் மேல்மா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து செய்யாறு கோட்ட செயற்பொறியாளா் (பொ).கே.ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்யாறு கோட்டத்துக்கு உள்பட்ட உதவி மின் திருவண்ணாமலை பொறியாளா் தெற்கு/பெருநகா் பிரிவு அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகா் துணை மின் நிலையத்தில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகம் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோரின் நலன் கருதி, திருவண்ணாமலை மின்பகிா்மான வட்டத்தில் உள்ள மேல்மா துணை மின்நிலையத்தில் ஜூலை 16 முதல் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.