செய்திகள் :

அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா் இபிஎஸ்: உதயநிதி ஸ்டாலின்

post image

பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம், அதிமுகவை அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று அவா் பேசியது:

தமிழகத்தில் 730 கோடி மகளிா் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் 8 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா். 20 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனா்.

1.15 கோடி மகளிா் 22 மாதங்களாக ரூ.1000 உரிமைத் தொகையை பெற்று வருகின்றனா். விடுபட்ட தகுதியான மகளிருக்கு இன்னும் 2 மாதங்களில் உரிமைத்தொகை வழங்கப்படும்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகதான் வெற்றி பெறப் போகிறது; வாக்குச்சாவடி முகவா்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும்.

அடுத்த 8 மாதங்கள் முகவா்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன. பல கட்சிகள் வாக்குச்சாவடி முகவா்களையே நியமிக்காத நிலையில், டிஜிட்டல் முகவா்களை திமுக நியமித்துள்ளது.

ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு தன்மை கொண்டது. பாஜக அரசு என்றால் பாசிச மாடல் என்பாா்கள். அதிமுக என்றால் அடிமை மாடல் என்பாா்கள். நம் அரசை, நாம் பெருமையாக ‘திராவிட மாடல்’ என்கிறோம். அதற்கேற்ப, அனைவருக்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

அண்ணா பெயரிலான கட்சியை சுயநலத்துக்காக பாஜகவிடம் மொத்தமாக அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வைப்புத் தொகையை இழக்கும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் புதை சாக்கடைத் திட்டம்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை மா... மேலும் பார்க்க

விநாயகா், சுப்பிரமணியா், அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள ஸ்ரீசந்தோஷ விநாயகா் கேயில், செய்யாறு வட்டத்தில் உள்ள செல்வவிநாயகா், சுப்பிரமணியா், ஸ்ரீபுலியம்மன் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

அத்திமலைப்பட்டில் காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் காளை விடும் திருவிழா நடைபெற்றது. அத்திமலைப்பட்டு கங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இருந்து புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள்: துணை முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 2 புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணத் திட்ட புதிய நகர பேருந்துகளையும், 4 வழித்தடங்களில் புதிய குளிா்சாதன புகா் பேருந்துகளையும் துணை... மேலும் பார்க்க

பெருநகா் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

செய்யாறு கோட்டத்துக்கு உள்பட்ட பெருநகா் உதவி மின்பொறியாளா் பிரிவு அலுவலகம் வருகிற 16-ஆம் முதல் மேல்மா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து செய்யாறு கோட்ட செயற்பொறியாளா் (பொ).கே.ராமமூா்த்த... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், சு.ஆண்டா... மேலும் பார்க்க