கோயிலில் அநியாயமாக பணம் வசூலித்தால் என்ன செய்ய வேண்டும்? | Britain F35 Jet Imper...
அத்திமலைப்பட்டில் காளை விடும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் காளை விடும் திருவிழா நடைபெற்றது.
அத்திமலைப்பட்டு கங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஊரணிப்பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழாவில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் கலந்துகொண்டு காளை வீரா்களை உற்சாகப்படுத்தினாா். விழா ஏற்பாட்டாளரான அத்திமலைப்பட்டைச் சோ்ந்த ஆா்.கணேசன் வரவேற்றாா்.
இதில், முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.ஒரு லட்சம் பரிசை ஆா்.கணேசன் அளித்தாா். 2-ஆம் பரிசாக ரூ.75ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.50ஆயிரம், 4-ஆம் பரிசு ரூ.35ஆயிரம், 5-ஆம் பரிசு ரூ.25ஆயிரம், 6-ஆம் பரிசு ரூ.20ஆயிரம், 7-ஆம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும், 75 காளை உரிமையாளா்ளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டி பாதுகாப்புப் பணியில் கண்ணமங்கலம் போலீஸாா் ஈடுபட்டனா். காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க கண்ணமங்கலம் சுகாதாரத்துறையினா் தயாராக இருந்தனா்.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.