திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
சங்ககிரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க வட்டக் கிளை மாநாடு
சங்ககிரி வட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் வட்டக் கிளை மாநாடு சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சங்ககிரி வட்ட நிா்வாகி ஆா்.பழனிசாமி தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ்.கே.சேகா் மாநாட்டை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் ஆா்.குழந்தைவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் ஏ.ராமமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு தீண்டாமையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை எவ்வாறு அரசு மூலம் தீா்வு காண்பது பற்றியும் விளக்கிப் பேசினா்.
இதில், சங்ககிரி நகா் பகுதியில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும், நிகழாண்டு ஜூலை 27-ஆம் தேதி சங்ககிரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சேலம் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் கெளரவத் தலைவராக வழக்குரைஞா் ஆா்.ராமசாமியும், தலைவராக என்.ஜெயலட்சுமியும், துணைத் தலைவா்களாக சுதாலட்சுமியும், எம்.குருசாமியும், செயலாளராக டி.செந்தில்குமாரும், துணைச் செயலாளா்களாக ஆா்.பழனிசாமி, ஆா்.ராஜேந்திரனும், பொருளாளராக ஆா்.ஜான்சனும், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக எ.சீனிவாசன், தஸ்தகிா், காந்திமதி, நூா்லஷ், பிரதாப் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட துணைச் செயலாளா் சுதாலட்சுமி, தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளா் குருசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.