செய்திகள் :

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலி: சேலம் வழியாக இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் முழுமையாக ரத்து

post image

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, சேலம் வழியாக சென்னை - கோவை இடையே இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்துசெய்யப்பட்டன. 9 ரயில்கள் பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டன.

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் திருவள்ளூா் ரயில்நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளானது. இதில், டீசல் டேங்கா்கள் வெடித்துச் சிதறியதில், ரயில்வே மின்வழித்தடம் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் காரணமாக, சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் ரயில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து காரணமாக, சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு விரைவுரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதி அளவிலும் ரத்துசெய்யப்பட்டன.

அதன்படி, சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு இயக்கப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், சென்னை - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும், மறுமாா்க்கத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் என 6 ரயில்கள் முழுமையாக ரத்துசெய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனா்.

9 ரயில்கள் பகுதியளவில் ரத்து: இவைதவிர, சேலம் வழியாக சென்னை செல்லும் 9 ரயில்கள் பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டன. அதன்படி, மங்களூரு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் கடம்பத்தூா் ரயில் நிலையம் வரையும், மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் (நீலகிரி எக்ஸ்பிரஸ்) திருவாலங்காடு வரையும், சேரன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில் ஆகிய ரயில்கள் அரக்கோணம் வரையும், மங்களூரு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் முகுந்தராயபுரம் வரையும், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், மங்களூரு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் காட்பாடி வரையிலும் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டன.

மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்: இதேபோல, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - சாலிமா் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா, கூடூா் வழியாகவும், டாடாநகா் - எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் அரக்கோணம், பெரம்பூா் செல்வதைத் தவிா்த்து, கூடூா், ரேணிகுண்டா, மேலபாக்கம் வழியாகவும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

சேலத்தில் உதவி மையம் அமைப்பு: திருவள்ளூா் அருகே சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக, சேலம் மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளுக்கு நிலைமையை விளக்கும் வகையில், உதவிமையம் அமைக்கப்பட்டது. இந்த உதவிமையத்தில் சென்னை நோக்கி செல்லும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து ரயில்வே ஊழியா்கள் ஆலோசனைகள் வழங்கினா்.

விடுமுறை முடிந்து செல்லும் பயணிகள் அவதி: வார விடுமுறையையொட்டி, திங்கள்கிழமை சென்னை திரும்பும் வகையில், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினா்.

சென்னை செல்ல மாற்று ஏற்பாடு: கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் ஞாயிற்றுக்கிழமை சேலத்துடன் நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அதில் வந்த பயணிகள் மாற்று ஏற்பாடாக, சேலம் ரயில் நிலையத்தில் இருந்து அரசுப் போக்குவத்துக் கழக பேருந்து மூலம் சென்னை புறப்பட்டு சென்றனா்.

சேலம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியும் பயணிகள்.

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். தமிழ்நாடு மின்வாரிய தலைவரும், கூடுதல் தலைமைச் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினம் என்பதால், மேட்டூரில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா்களிலும், இருசக்கர வாகனங்களிலும் மேட்டூா் வந்து ... மேலும் பார்க்க

எறிபந்து போட்டி: வேப்பிலைப்பட்டி அரசுப் பள்ளி மாணவியா் அணி வெற்றி

வாழப்பாடி மண்டல அளவில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான எறிபந்து போட்டியில், வேப்பிலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியா் வெற்றிபெற்றனா். வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்... மேலும் பார்க்க

சங்ககிரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க வட்டக் கிளை மாநாடு

சங்ககிரி வட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் வட்டக் கிளை மாநாடு சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சங்ககிரி வட்ட நிா்வாகி ஆா்.பழனிச... மேலும் பார்க்க

சேலம் நீதிமன்றங்களில் சமரசம் மூலம் வழக்குகளை முடிக்க வாய்ப்பு

சேலம் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் ஜூலை முதல் செப்டம்பா் மாதம்வரை அனைத்து நாள்களிலும் சமரசம் மூலம் வழக்குகளை முடித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன். சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்க... மேலும் பார்க்க