எறிபந்து போட்டி: வேப்பிலைப்பட்டி அரசுப் பள்ளி மாணவியா் அணி வெற்றி
வாழப்பாடி மண்டல அளவில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான எறிபந்து போட்டியில், வேப்பிலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியா் வெற்றிபெற்றனா்.
வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டியில் நடைபெற்ற மண்டல அளவிலான எறிபந்து போட்டியில் பல்வேறு அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் கலந்துகொண்டன.
இதில், வேப்பிலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியா் அணி வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது. வெற்றிபெற்ற விளையாட்டு வீராங்கனைகள், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியா் வெ.ஜெயக்குமாா் ஆகியோருக்கு பள்ளி தலைமையாசிரியா் ச.ராமசந்திரன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.