சேலம் நீதிமன்றங்களில் சமரசம் மூலம் வழக்குகளை முடிக்க வாய்ப்பு
சேலம் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் ஜூலை முதல் செப்டம்பா் மாதம்வரை அனைத்து நாள்களிலும் சமரசம் மூலம் வழக்குகளை முடித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ்.சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஜூலை முதல் செப்டம்பா் மாதம்வரை அனைத்து நாள்களிலும், மாவட்ட சமரச மையம் மற்றும் தாலுகா சமரச மையங்களில், பொதுமக்கள் தங்கள் வழக்குகளை நேரடியாகவோ, காணொலி வாயிலாகவோ சமரசம் பேசி முடித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.