பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
Kota Srinivasa Rao: "வில்லன், காமெடி, குணச்சித்திரம்... ஒரே ஷாட்டில் நடித்துவிடுவார்" - சத்யராஜ்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 83.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.
அவரின் மறைவிற்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு மூலம் கோட்டா சீனிவாச ராவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
"மிகச்சிறந்த நடிகரும், என்னுடைய நண்பருமான கோட்டா சீனிவாச ராவின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொள்கிறேன்.
தனித்தனியாக ஒரு படத்தில் வில்லன் ஆக நடிக்கலாம், காமெடி நடிகராக நடிக்கலாம். அல்லது குணச்சித்திர நடிகர் கதாபத்திரத்தில் நடிக்கலாம். ஆனால் இது அனைத்தையும் ஒரே ஷாட்டில் கோட்ட சீனிவாச ராவ் நடித்துவிடுவார்.

அப்படிபட்ட அற்புதமான திரைக்கலைஞர் அவர். அவருக்கு மீண்டும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொள்கிறேன்" என்று தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...