செய்திகள் :

Retro நாயகிகள் 11: '’நாங்க வாழறதுக்காக நீ சாகப் போறன்னு அம்மா அழுதாங்க’’- நடிகை பிரமிளா பர்சனல்ஸ்

post image

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, ஹீரோயினா மட்டுமில்லாம, கிளாமர், நெகட்டிவ் ரோல்னு நடிப்பால அசர வச்ச நடிகை பிரமிளாவைப்பத்தி தான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..!

நடிகை பிரமிளா
நடிகை பிரமிளா

கொரோனாவுக்கு முன்னால, கிட்டத்தட்ட 40 வருடங்களா நடிகை பிரமிளா அமெரிக்காவுல இருக்கிற கலிபோர்னியா மாகாணத்துல கணவரோட சந்தோஷமா இருக்கிறார்னு கேள்விப்பட்டு அவர்கிட்ட பேசினோம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு அப்புறம் ஒரு தமிழ் மீடியாவுல பேசுறேன்னு சொல்லிட்டு, அவர் அவள் விகடனுக்கு மனம் திறந்து ஒரு பெரிய பேட்டி கொடுத்திருந்தார். 

நான் திருச்சிப் பொண்ணு. காசு, பணத்துக்குக் கஷ்டமே இல்லாத குடும்பத்துல பிறந்தேன். அப்பா அமல்தாஸ், அம்மா சுசீலா. அப்பா மெடிக்கல் லைன்ல பிசினஸ் பண்ணிட்டிருந்தார். அவரோட பிசினஸ் விஷயமா கொஞ்ச வருஷம் போபாலில் இருந்தோம். பிசினஸ் பெரியளவுக்கு கைக்கொடுக்காததால, அங்கிருந்து திருச்சி வந்து செட்டிலாகிட்டோம். போபாலில் இந்தி மீடியத்துல படிச்சிக்கிட்டிருந்த என்னை, திருச்சிக்கு வந்ததும் தமிழ் மீடியத்துல படிக்க போட்டாங்க. அதுவும் 6 வயசுல, மறுபடியும் எல்.கே.ஜி.யில் இருந்து படிக்க ஆரம்பிச்சேன். எங்க வீட்ல நான், எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கைன்னு மொத்தம் நாலு பசங்க. அப்பாவோட பிசினஸ் நல்லா நடக்காததால குடும்பம் மெள்ள மெள்ள வறுமையில வாட ஆரம்பிச்சுது. 

நடிகை பிரமிளா
நடிகை பிரமிளா

பிசினஸை எப்படியாவது தூக்கி நிறுத்திடணும்னு, லாபத்துல நடத்திடணும்னு அப்பா ரொம்ப போராடிட்டு இருந்தார். ஒருகட்டத்துல அது முடியாம போயிடுச்சு. குடும்பமா தற்கொலை பண்ணிக்கலாம்னு அம்மாவும் அப்பாவும் முடிவு எடுத்துட்டாங்க. ஆனா, இயற்கை என் மூலமா வேற மாதிரி பிளான் பண்ணி இருந்ததுன்னு எங்க யாருக்குமே தெரியல. ’இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க குடும்பமே இல்லாம போகப் போகுது’ அப்படிங்கிற நேரத்துல கதவு தட்டப்பட்டுச்சு. கதவைத் திறந்தோம். அங்க ஒருத்தர் நின்னுட்டு இருந்தாரு. அவர் எம்ஜிஆரோட அண்ணன் எம் ஜி சக்கரபாணியோட எம்ப்ளாயி. விருந்தோம்பலுக்காக அவர உள்ள கூப்பிட்டோம்.

அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு, உங்க பொண்ணை சினிமாவுல நடிக்க வைக்க உங்களுக்கு விருப்பமான்னு கேட்டார். அம்மாவும் அப்பாவும் உடனே இல்லைங்கன்னு மறுத்துட்டாங்க. ஆனா, அவர் உங்க பொண்ணோட முகம் நல்லா போட்டோஜெனிக்கா இருக்குங்க. எம் ஜி சக்கரபாணி சார் அவருடைய சொந்த படத்துல அவரோட மகனுக்கு ஜோடியா உங்க பொண்ணு நடிக்கணும்னு விருப்பப்படுகிறார்னு சொன்னார்.

பொம்பள பிள்ளையை சினிமால நடிக்க வைக்கிறதா; அந்த காசுல நாம வாழறதான்னு அம்மாவும் அப்பாவும் அந்த வாய்ப்பை கிட்டத்தட்ட மறுத்துட்டாங்க.

என்னோட போட்டோ எம்.ஜி. சக்கரபாணி சார்கிட்ட எப்படிப்போச்சுங்கிறது ஒரு சின்ன கதை. நானும் என் தோழியும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்திருந்தோம். அவளோட மாமா சினிமாவுல ஒரு புரொடக்ஷன் மேனேஜரா இருந்தார். அவர் கண்ணுல அந்த போட்டோ பட்டிருக்கு. அட இந்தப்பொண்ணு ரொம்ப முக லட்சணமா இருக்கே அப்படின்னு என்னோட போட்டோவை எம்.ஜி.சக்கரபாணி சார்கிட்ட காமிச்சிருக்கார். அப்படித்தான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்துச்சு. 

எனக்கு பாட்டு, டான்ஸ்னு கலைத்துறையில ரொம்ப ஆர்வம் இருந்துச்சு. ஸ்கூல்ல ’பிரமிளா டான்ஸ் ஆடு’ன்னு சொல்றதுக்குள்ளவே நான் ஆட ஆரம்பிச்சிடுவேன். ஆனா, சினிமால நடிக்கிறது பத்தியெல்லாம் நான் யோசிச்சதே இல்ல. தவிர, அப்பாவுக்கும் அதெல்லாம் பிடிக்காது. நான் ஸ்கூல் படிக்கிறப்போ பயங்கரமான சிவாஜி ஃபேன். வீட்ல மிட்டாய் வாங்க கொடுக்கிற காசையெல்லாம் சிவாஜி போட்டோ வாங்குறதுக்குத்தான் யூஸ் பண்ணுவேன். அதை எல்லாத்தையும் என்னோட நோட் புக்ல ஒளிச்சு வெச்சிருப்பேன். ஒரு நாள் எங்கப்பா என் நோட்டை எதுக்காகவோ எடுக்க உள்ள இருந்து சிவாஜி போட்டோவா பொலபொலன்னு கொட்டுச்சு. அப்பா அன்னிக்கு என்ன அடிச்ச அடி இன்னிக்கு நினைச்சாலும் வலிக்குது.

நடிகை பிரமிளாv
நடிகை பிரமிளா

பொம்பள பிள்ளையை சினிமால நடிக்க வைக்கிறதா; அந்த காசுல நாம வாழறதான்னு அம்மாவும் அப்பாவும் அந்த வாய்ப்பை கிட்டத்தட்ட மறுத்துட்டாங்க.  ஆனா, என் வீட்டுக்கு வந்தவர் ’எம். ஜி. சக்கரபாணி சாரோட சொந்தப்படம்மா இது. உங்க மகளுக்கு ஹீரோயின் வாய்ப்புன்னு எங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ணப் பார்த்தார். கடைசியில அப்பாவும் மனசு மாறி சரின்னு தலையாட்டினார். அந்தப் படம் பேரு ’மீனவன் மகன்.’ அட்வான்ஸா ஆயிரம் ரூபா கொடுத்துட்டுப் போனாரு. அன்னிக்கு எங்கம்மா அழுதுகிட்டே சொன்ன ஒரு வார்த்தை இன்னமும் என் நினைவுல இருக்கு. 'நாங்க எல்லாம் வாழறதுக்காக நீ சாகப் போறம்மா'ன்னு அழுதாங்க. 14 வயசுல அந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியல. அந்தப் படத்துல நடிச்சேன். ஆனா, படம் பாதியில் நின்னுப் போச்சு.

பட், என்னோட ஸ்டில்ஸ் அந்த நேரத்துல ஆங்கில பத்திரிகைகள்லகூட வந்துச்சு. அத பார்த்துட்டு இந்தக் குட்டிப்பொண்ணோட முகம் ரொம்ப லட்சணமா இருக்கேன்னு, மலையாளத்துல ஒரே நேரத்துல மூணு பெரிய பேனர்கள்ல இருந்து வாய்ப்பு வந்துச்சு. நானும் நடிக்க ஆரம்பிச்சேன். இதுக்கு நடுவுல தமிழ்ல ’வாழையடி வாழை’ படத்துல முத்துராமன் சாருக்கு ஜோடியா ஒரு வாய்ப்பு வந்துச்சு. ’நான்தான் உலகத்திலேயே பெரிய அழகி’ன்னு நினைக்கிற ஒரு ஹீரோயின் கேரக்டர் அது. தமிழ்ல இந்தப் படம் எனக்கு ரொம்ப நல்ல அறிமுகத்தை கொடுத்துச்சு. இந்த நேரத்துல கே.பி. பாலச்சந்தர் சார் படத்துல நடிக்கிறதுக்காக அப்ரோச் பண்ணார். அப்பாவும் நானும் அவரோட ஆபீஸ்க்கு போனோம். 

நடிகை பிரமிளா
நடிகை பிரமிளா

இதுவொரு பாலியல் தொழிலாளி பத்தின கதை அப்படின்னு பாலசந்தர் சார் சொன்னவுடனே எங்கப்பா உட்கார்ந்துக்கிட்டு இருந்த சேரை விட்டு எந்திரிச்சிட்டார். இந்த மாதிரி கதையில என் பொண்ணு நடிக்க மாட்டான்னு சொல்லிட்டாரு. ஆனா, பாலச்சந்தர் சார் கதையை முழுசா கேட்டுட்டு முடிவெடுங்கன்னு சொன்னார். கதையைக் கேட்டு முடிச்ச அப்பா என் பொண்ணு இந்த படத்துல கண்டிப்பா நடிப்பா சார்னு சம்மதம் கொடுத்தார். அந்தப் படத்துல என்னோட வெற்று முதுகு மேல ரூபாய் நோட்டுகள் இருக்கிற மாதிரி ஒரு சீன். அந்த சீன்ல நடிக்கிறதுக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. கே.பி. சார் அந்த சீன் எடுக்கிறப்போ எங்கம்மாவையும் என்னோட இருக்க வச்சு ஷூட் பண்ணார். என்னோட வயசுக்கு மீறுன கதைதான். ஆனா, பாலச்சந்தர் சார் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நடிச்சேன். இன்னிக்கு வரைக்கும் அரங்கேற்றம் லலிதா கேரக்டர்தான் எனக்கான அடையாளமா இருக்கு" என்கிறார் எமோஷனலாக. 

1972-ல `வாழையடி வாழை'யில் அறிமுகமானவர் 1973-ல அரங்கேற்றம், கோமாதா என் குலமாதா, மனிதரில் மாணிக்கம், தங்கப்பதக்கம்னு தமிழ்த்திரையுலகுல அழுத்தமா தடம் பதிக்க ஆரம்பிச்சாங்க. முதல் படமான வாழையடி வாழையிலேயே பிரமிளாவோட அழகு தான் சப்ஜெக்ட், அரங்கேற்றம் படத்துல பாலியல் தொழிலாளி கேரக்டர்ங்கிறதால, அழகும் கிளாமரும் சேர்ந்து ரோல்க்ள் பண்ண ஆரம்பிச்சாங்க பிரமிளா.  

தங்கப்பதக்கம் படத்தில் நடிகை பிரமிளா
தங்கப்பதக்கம் படத்தில் நடிகை பிரமிளா

’தங்கப்பதக்க’த்தில் சிவாஜிக்கு மருமகளா நடிச்சவங்க, கவரிமான் படத்துல மனைவியா நடித்திருப்பாங்க. கதாநாயகி கேரக்டர்ஸ் மட்டுமில்லாம வில்லி கேரக்டர்ஸ்லேயும் நடிச்சிருக்காங்க பிரமிளா. அரங்கேற்றம் படத்துல எப்படியொரு துணிச்சலான கேரக்டர்ல நடிச்சாங்களோ அதே மாதிரி கவரிமான்ல திருமணம் தாண்டிய உறவுல இருக்கிற ஒரு மனைவி கேரக்டர்ல துணிச்சலா நடிச்சிருப்பாங்க. 

ராதா, சொந்தம், சதுரங்கம், ரத்தப்பாசம், தேவதைன்னு 70-கள்ல கடகடன்னு பல படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சவங்க, 80-கள்ல ஜல்லிக்கட்டு, காவலன் அவன் கோவலன், என் தங்கை கல்யாணி போன்ற படங்கள்ல அடுத்த தலைமுறையினர் கூடவும் நடிச்சாங்க பிரமிளா. 72-ல தமிழ் சினிமால நடிக்க ஆரம்பிச்சவங்க 90-ஓட நடிக்கிறதை நிறுத்திட்டாங்க. காரணம் என்ன தெரியுமா?

குடும்பத்துக்காகத்தான் நான் நடிக்கவே வந்தேன்னு ரொம்ப வெளிப்படையா பேட்டிகள்ல சொல்லிக்கிட்டிருந்த பிரமிளா திருமணமே வேண்டாம்னு உறுதியாக இருந்திருக்காங்க. கன்னியாஸ்திரி ஆகணும் என்கிற தன்னோட விருப்பத்தையும் சில பேட்டிகள்ல சொல்லியிருக்காங்க. ஆனா, அவங்கம்மா அப்பா அண்ணனோட விருப்பத்துக்காக கல்யாணம் பண்ணிக்கலாம்னு மனசு மாறியிருக்காங்க. என் குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு நான் சம்பாதிச்சுட்டேன். இதுக்கு மேல நான் என் குடும்பத்தோட விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்னு இருக்கேன்னு அவங்களே அந்த நேரத்துல ஒரு பேட்டியில் சொல்லியிருக்காங்க. 

குடும்பத்தினருடன் நடிகை பிரமிளா
குடும்பத்தினருடன் நடிகை பிரமிளா

குடும்பத்துக்காக நடிக்க வந்தவங்க தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு கிட்டத்தட்ட 250 படங்கள் நடிச்சு குடும்பத்தை செட்டில் பண்ணியிருக்காங்க. கூடப் பிறந்த எல்லாரும் அமெரிக்காவுல போய் செட்டிலா இவங்களும் அங்கேயே போய் செட்டில் ஆகுறாங்க. அங்க தான் கணவர் பால் செலிஸ்ட்டாவை மீட் பண்ணியிருக்காங்க.

தன்னோட திருமண வாழ்க்கையை பத்தி அவள் விகடனுக்கு கொடுத்த பேட்டியில, ’’அண்ணன் சொன்னதால 1993-ல் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தங்கமான மனுஷன். 'வி லவ் ஈச் அதர்'னு வாழ்ந்துக்கிட்டிருந்தோம். எல்லாமே சரியா இருந்தா அது வாழ்க்கையே கிடையாதே. எங்க வாழ்க்கையிலேயும் ஒரு குறை இருந்தது. எங்க ரெண்டு பேருக்குமே சரியான வேலை இல்லை. அவருக்கு, போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல வேலைப்பார்க்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா, அவருக்கு கண் பார்வையில் பிரச்னை இருந்ததால, அந்த டிபார்ட்மெண்ட்ல வேலைக் கிடைக்காது. ஸோ, டாலர் அச்சடிக்கிற இடத்துல இருந்து அதை டிரக்குல எடுத்துட்டுப் போய் வங்கிகளில், கம்பெனிகளில் சேர்க்கிற செக்யூரிட்டி வேலையில் ஜாயின் பண்ணார். இதுவும் கிட்டத்தட்ட போலீஸ் டிப்பார்ட்மெண்ட் மாதிரிதான். இந்த வேலைக் கிடைக்கிறது அவ்வளவு சுலபம் கிடையாது. இரண்டு வருஷம் படிச்சு, எக்ஸாம் எழுதி, பாஸ் பண்ணா தான் இந்த வேலைக் கிடைக்கும். கஷ்டப்பட்டு படிச்சு இந்த வேலைக்கு அவர் போயிக்கிட்டிருந்தப்போ நான், கம்ப்யூட்டர்ல சால்டிரிங் வேலை, சேல்ஸ் உமன் வேலைன்னு சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக்கிட்டிருந்தேன். ஏன்னா, எனக்குத்தான் பெருசா படிப்பில்லையே. அந்த நேரத்துல எனக்கு இங்கிலீஷ்கூட சரளமாக பேச வராது. 

கணவருடன் நடிகை பிரமிளா
கணவருடன் நடிகை பிரமிளா

'நீயும் என்னை மாதிரி செக்யூரிட்டி வேலைக்கு வந்துடு'ன்னு சொன்னார் பால். நான் பயந்துபோய் 'என்னால முடியாது'ன்னு சொன்னேன். 'நீ டிரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லு'ன்னு ஊக்கப்படுத்தினார்.  நானும் அவருக்காக கோர்ஸ்ல ஜாயின் பண்ணேன். நைட்டெல்லாம் அவர்கிட்ட டவுட் கேட்பேன். திட்டிக்கிட்டே சொல்லிக் கொடுப்பார்.  கடைசியா நானும் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டு, வேலைக்குச் சேர்ந்துட்டேன். நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, டாலர் நோட்டுக்களை டிரக்கில் எடுத்துட்டுப் போன டிரைவரை சுட்டுட்டு திருடர்கள் பணத்தை எடுத்துட்டுப் போயிட்டாங்க என்ற செய்திதான் என் காதுகள்ல விழுந்துச்சு.  அங்க வேலைப் பார்த்த வரைக்கும் பயந்துட்டேதான் டிரக்குல பணத்தை எடுத்துட்டுப் போவேன்.  என் நல்ல நேரம், எனக்கு எந்தவித ஆபத்தும் நடக்கலை. அப்படியே நடந்திருந்தாலும், எங்ககிட்ட லைசென்ஸ் துப்பாக்கி இருக்கும். சுட்டாலும் குற்றம் கிடையாது. வேலை, வீடு, ஓவர் டைம்னு ஓடி ஓடி உழைச்சு சொந்தமா ஒரு வீடு வாங்கினோம். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு வேலை, வேலைன்னு ஓடிக்கிட்டே இருந்தவ, இப்ப ரிட்டயர்டு ஆயிட்டேன். 

இப்போ அண்ணனோட பேரப்பசங்க, தங்கையோட பேரப்பசங்கள்னு வளர்த்துக்கிட்டு நிம்மதியா இருக்கேன். வீட்டுக்குப் பின்னாடி பெரிய ஆப்பிள் தோட்டம் வெச்சிருக்கேன். கணவரோட வேட்டைக்குப் போவேன், தோட்ட வேலை பார்ப்பேன், சாயங்கால நேரங்கள்ல பழைய தமிழ்ப்படங்கள் வாழ்க்கை நிம்மதியா போய்க்கிட்டு இருக்கு’’ என்றார்.

தமிழ் சினிமா உள்ளவரை ’அரங்கேற்றம்’ லலிதாவையும் பிரமிளாவையும் யாராலும் மறக்க முடியாது!

(நாயகிகள் வருவார்கள்)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Kota Srinivasa Rao: "வில்லன், காமெடி, குணச்சித்திரம்... ஒரே ஷாட்டில் நடித்துவிடுவார்" - சத்யராஜ்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 83. நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். நாட்டின் உயரிய வி... மேலும் பார்க்க

Kota Srinivasa Rao: "ஒரு லெஜண்டை இழந்திருக்கிறோம்" - கோட்டா சீனிவாச ராவ் மறைவு குறித்து கார்த்தி

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 83. நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள... மேலும் பார்க்க

மாயக்கூத்து விமர்சனம்: ஃபேண்டஸி படம் பேசும் `எழுத்து' அரசியல்; தமிழுக்கு இது கொஞ்சம் புதுசுதான்!

வார இதழ்களுக்குத் தொடர்கதை எழுதிவரும் எழுத்தாளர் வாசன் (நாகராஜ் கண்ணன்), தான் ஒரு படைப்பாளன், தான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் வழியே தானும் ஒரு கடவுள் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார். அவரது ஒரு கதையில்... மேலும் பார்க்க

Thalaivan Thalaivi: “மறக்க முடியாத அனுபவமா இருந்துச்சு; இதுவரை நான் பண்ணாத கதாபாத்திரம்...” -ரோஷினி

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தலைவன் தலைவி'. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்... மேலும் பார்க்க

Thalaivan Thalaivi: "என்னோட ரொம்ப நாள் கனவு நடந்துருச்சு" - `பொட்டல மிட்டாயே' சாங் பாடகி சுப்லாஷினி

விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தலைவன் தலைவி'.இப்படத்தில், காளி வெங்கட், சரவணன், ரோஷினி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.... மேலும் பார்க்க

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: "அவர் உடல் ஒத்துழைச்சிருந்தா..." - டப்பிங் ஆர்டிஸ்ட் ராஜேந்திரன் உருக்கம்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. வயோதிகப் பிரச்னைகளால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு மறைந்தார்.வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களி... மேலும் பார்க்க